Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்துக்கு முதல் "அடி".. முக்கிய வீரர் "திடீர்" விலகல்.. இந்திய தொடரில் முக்கிய மாற்றம்

லண்டன்: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தனது முக்கிய வீரர் ஒருவரை இழக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தோல்விக்கு பிறகு, இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை எதிர்நோக்கியுள்ளது.

5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் செப்டம்பர் 14ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்திய அணி பிளான்

இந்திய அணி பிளான்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்வி காரணமாக, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில், வெற்றிப் பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இந்நிலையில், இந்திய அணியின் ஓப்பனிங் வீரர் ஷுப்மன் கில் காயம் காரணமாக இங்கிலாந்து தொடரில் இருந்து விலகிவிட்டார். அவருக்கு பதில் ரோஹித் ஷர்மாவுடன் ஓப்பனிங் இறங்க ப்ரித்வி ஷாவை அழைக்க, இந்திய அணி ஏற்பாடு செய்து வந்ததாக தகவல்கள் தெரிவித்தன.

ஓப்பனிங் பஞ்சாயத்து

ஓப்பனிங் பஞ்சாயத்து

இந்நிலையில், ப்ரித்வி ஷா, படிக்கல் என்று எந்த வீரரையும் இங்கிலாந்து அனுப்ப முடியாது என்றும் ரோஹித் ஷர்மாவுடன் மாயங்க் அகர்வால் தான் ஓப்பனிங் இறங்குவார் என்று பிசிசிஐ தடாலடியாக அறிவித்து இருக்கிறது. அதேசமயம், லோகேஷ் ராகுலை மிடில் ஆர்டரில் களமிறக்குவது என்றும் இந்திய அணி முடிவு செய்திருக்கிறது. இதனால், அணியின் ஓப்பனிங் பஞ்சாயத்து முடிவுக்கு வந்துவிட்டது.

அணியில் இருந்து விலகல்

அணியில் இருந்து விலகல்

இந்த நிலையில், இங்கிலாந்து அணியில் காயம் காரணமாக ஓலே போப் காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இடது தொடையில் ஏற்பட்ட தசைக் காயம் ஏற்பட அவர் அணியில் இருந்து விலகுவார் என தெரிகிறது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஓலே போப் அணியில் இருந்து விலகும் பட்சத்தில், இங்கிலாந்து அணிக்கு அது நிச்சயம் இழப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இந்த சூழலில், ஓலே போப் காயம் காரணமாக, டேவிட் மலன் அணியில் இணைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

டேவிட் மலன்

டேவிட் மலன்

இந்திய அணிக்கு எதிராக ஓப்பனிங் இறங்கக் கூடிய வீரர் என்பதால், இவருக்கென்ன இந்திய அணி நிச்சயம் வியூகங்களை வகுத்திருக்கும். இவர் தற்போது அணியில் இருந்து விலகும் பட்சத்தில், கோலி & கோ மீண்டும் தங்களது ஸ்டிராடஜியை மாற்ற வேண்டிய சூழல் நிலவும். அதேசமயம், டேவிட் மலன் இந்திய அணிக்கு கடும் சவால் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, July 10, 2021, 17:45 [IST]
Other articles published on Jul 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+