ஜோகானஸ்பர்க்: சச்சின் டெண்டுல்கருக்கு தொடையில் காயம் ஏற்பட்டதையடுத்து அவர் உடனடியாக நாடு திரும்புகிறார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற 2வது ஒரு நாள்ப் போட்டியின்போது அவருக்கு வலது தொடையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அடுத்த 3 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சச்சின் உடனடியாக நாடு திரும்புகிறார் என்று இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோணி தெரிவித்துள்ளார்.