Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தென் ஆப்ரிக்காவில் அந்த வீரர் காயத்தால் விலகல்...!! இப்பவே இந்தியா ஜெயிச்ச மாதிரி தான்..!

லண்டன்:தோள்பட்டை காயம் காரணமாக தென் ஆப்ரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெய்ன் உலகக் கோப்பைத் தொடரில் இருந்து விலகுகிறார் என்று அந்நாட்டு அணி அறிவித்துள்ளது.

ஸ்டெயினுக்கு பதிலாக இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஹென்ட்ரிக்ஸ் சேர்க்கப் பட்டுள்ளார். ஜனவரி மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக தான் அவர் அறிமுகமாகினார். களத்தில் ஆக்ரோஷமாக பந்துவீசக்கூடியவர், பந்துகளை விரைவாக வீசக்கூடியவர் என்ற பெயர் பெற்றவர் ஸ்டெய்ன். அவர் இல்லாதது தென் ஆப்ரிக்காவுக்கு பெரும் பின்னடைவாகும்.

தற்போது ஸ்டெய்னின் வயது 35. ஏற்கெனவே தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக போட்டிகளில் பங்கேற்காத அவர் சமீபத்தில்தான் விளையாட வந்தார். இப்போது மீண்டும் தோள்பட்டை காயத்தால் அவதிப்படுவதால், ஏறக்குறைய அவரின் கிரிக்கெட் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தோள்பட்டையில் காயம்

தோள்பட்டையில் காயம்

ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணியில் இடம்பெற்று ஒரு போட்டியில் மட்டும் பந்துவீசிய ஸ்டெய்ன் இதே தோள்பட்டை காயத்தால்தான் விலகினார். உலக கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்படும்போதுகூட முழுமையாக உடல்தகுதி இல்லாமல்தான் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

குணம் அடையவில்லை

குணம் அடையவில்லை

இரு போட்டிகளில் பங்கேற்காத நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையில் முழுமையாக குணமடையாதது தெரிய வந்தது. எனவே, அவர் உலக கோப்பைத் தொடரில் விளையாட மாட்டார் என்று தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

பெரும் பின்னடைவு

பெரும் பின்னடைவு

ஸ்டெய்ன் இதுவரை 125 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 196 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு எதிராக 2015-ம் ஆண்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது மறக்க முடியாத ஒன்று. தற்போது தென் ஆப்ரிக்க அணியில் ஸ்டெய்ன் இல்லாதது, இங்கிடி காயத்தால் விளையாடதது போன்றவை அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

மாற்று வீரர் சேர்ப்பு

மாற்று வீரர் சேர்ப்பு

ஸ்டெய்னுக்கு மாற்றாக அணியில் பியூரான் ஹெண்ட்ரிக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். நெகிடி, ரபாடா பந்துவீச்சு தென் ஆப்ரிக்கா அணிக்கு வலு சேர்க்கவில்லை. நாளை இந்தியாவுக்கு எதிரான போட்டி நடைபெறவுள்ள நிலையில், ஸ்டெயின் இந்த தொடரில் இருந்தே விலகியுள்ளது அந்த அணிக்கு இழப்பாக பார்க்கப்படுகிறது.

தெ. ஆப்ரிக்காவுக்கு நெருக்கடி

தெ. ஆப்ரிக்காவுக்கு நெருக்கடி

தென் ஆப்ரிக்கா வீரர்கள் சுழற்பந்தை சமாளித்து ஆடுவதிலும், நெருக்கடியின் போதும் வழக்கம்போல் விக்கெட்டை இழப்பார். ஆதலால், தென் ஆப்ரிக்க அணியை நெருக்கடியுடனே நகர்த்தி வருவது, இந்திய அணிக்கு உதவியாக இருக்கும்.

Story first published: Tuesday, June 4, 2019, 23:35 [IST]
Other articles published on Jun 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+