இந்திய அணியை விட்டு தோனி விலக காரணமே வேற.. எல்லோரும் சேர்ந்து மூடி மறைத்த அந்த ரகசியம் இது தான்!
Recommended Video
மும்பை : இந்திய அணியில் இருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு கடந்த இரண்டு மாதங்களாக விலகி இருக்கிறார் தோனி.
மீண்டும், இரண்டு மாத காலத்திற்கு விடுப்பை தோனி நீட்டித்துக் கொண்டதாக பிசிசிஐ வட்டாரம் சில நாட்கள் முன்பு தகவல் அளித்தது.
தோனி ஏன் இரண்டு, இரண்டு மாதமாக விடுப்பை நீட்டித்துக் கொண்டே போகிறார்? இந்திய அணியில் ஆட விருப்பம் இல்லை என்றால் ஓய்வை அறிவிக்கலாமே என்ற கேள்விகள் சாமானிய ரசிகர்களிடம் எழுந்தது

முக்கிய தகவல்
இந்த நிலையில் தான் தோனி விலகல் குறித்த முக்கிய தகவல் தெரிய வந்துள்ளது. ஐபிஎல் மற்றும் உலகக்கோப்பை தொடரின் போது அவருக்கு ஏற்பட்ட காயத்தின் காரணமாகவே தோனி ஓய்வில் இருப்பதாக கூறப்படுகிறது.

மூடி மறைக்கப்பட்டது
காயம் தான் தோனி விடுப்புக்கு காரணம் என்றால் அதை ஏன் பிசிசிஐ வெளிப்படையாக கூறாமல் பல்வேறு காரணங்களை சொல்லி மூடி மறைக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தோனியும் இது பற்றி வெளிப்படையாக கூறவில்லை. வெளிப்படையாக கூறி இருக்க வேண்டிய பிசிசிஐயும் வேறு காரணங்களை தான் கூறி வந்தது.

தோனி ஓய்வு வதந்தி
2019 உலகக்கோப்பை தொடர் முடிந்த உடனேயே தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவிக்கப் போகிறார் என்ற வதந்தி காட்டுத் தீயாக பரவியது. எனினும், அப்படி எதுவும் நடக்கவில்லை.

தோனி விலகல்
ஆனால், தோனி முதலில் இரண்டு மாத காலமும், பின்னர் இரண்டு மாதமுமாக விடுப்பு எடுத்துக் கொண்டார். அதனால் வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா தொடரில் பங்கேற்கவில்லை. வங்கதேச அணிக்கு எதிரான தொடரிலும் தோனி பங்கேற்க மாட்டார் என தெரிகிறது.

ரிஷப் பண்ட் காரணமா?
தோனி விலகலுக்கு என்ன காரணம் என பேசப்பட்டு வந்த போது இளம் விக்கெட் கீப்பரை அடையாளம் காணும் முயற்சியாக, ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு அளிக்கவே விலகி இருக்கிறார் என கூறப்பட்டது.

உண்மை என்ன?
ஆனால், உண்மை என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது. தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில் பிசிசிஐயில் இருந்து வந்த தகவலின் படி, தோனி உலகக்கோப்பை தொடரின் போது ஏற்பட்ட காயத்தில் இருப்பதாகவும், நவம்பர் வரை அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை தொடரில் காயம்
ஐபிஎல் தொடரின் போதே தோனிக்கு முதுகுப் பகுதியில் காயம் இருந்தது. அது குறித்து தோனியே அப்போது பேசி இருந்தார். அதைத் தொடர்ந்து உலகக்கோப்பை தொடரில் காயத்தோடு பங்கேற்றார்.

காயம் அதிகரிப்பு
உலகக்கோப்பை தொடரின் போது தோனிக்கு கை விரலில் காயம் ஏற்பட்டது. மேலும், முதுகில் ஏற்பட்ட உள்காயத்தின் அளவு அதிகரித்ததாகவும் கூறப்படுகிறது. அதற்காகவே தோனி தற்போது ஓய்வில் இருக்கிறார் என்கிறது பிசிசிஐ வட்டாரம்.

டிசம்பரில் வருவார்
தோனியின் விடுப்பு நவம்பர் மாதம் முடிவடையும் எனவும், டிசம்பர் மாதம் நடை பெற உள்ள வெஸ்ட் இண்டீஸ் டி20 கிரிக்கெட் தொடரில் தோனி இந்திய அணியில் மீண்டும் இணைவார் என அதிகாரப்பூர்வமற்ற தகவல் சொல்லப்படுகிறது.

விமர்சனம் எழுமா?
ஏற்கனவே, தோனி பேட்டிங் குறித்து உலகக்கோப்பை தொடரில் விமர்சனம் எழுந்த நிலையில், தோனி மீண்டும் இந்திய அணியில் இணைந்து கிரிக்கெட் ஆட வந்தால் விமர்சனம் எழுமா? தோனியை அணியில் சேர்த்துக் கொள்ள கேப்டன் கோலி மற்றும் தேர்வுக் குழு சம்மதிப்பார்களா?


Click it and Unblock the Notifications