Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தொடர் காயங்கள்... இதே கதி தொடர்ந்தா பைனல்ஸ் கனவு எப்படி நிறைவேறும்?

துபாய்: ஐபிஎல்லின் இன்றைய 30வது போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளன.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் வீரர்கள் தொடர்ந்து காயங்களால் அவதியுற்று வரும் நிலையில் இன்றைய போட்டி அந்த அணிக்கு மிகுந்த கடுமையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இதனிடையே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் புதிதாக இணைந்துள்ள பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித், சஞ்சு சாம்சன் ஆகியோர் அணிக்கு பலத்தை சேர்த்துள்ளனர்.

டெல்லி -ராஜஸ்தான் அணிகள் மோதல்

டெல்லி -ராஜஸ்தான் அணிகள் மோதல்

டெல்லி கேபிடல்ஸ் அணி இந்த ஐபிஎல் சீசனில் ஆரம்பம் முதலே தனது சிறப்பான ஆட்டங்களை பதிவு செய்து வருகின்றது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 5ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் அந்த அணி முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இன்றைய 30வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதவுள்ளது.

காயம் காரணமாக விலகல்

காயம் காரணமாக விலகல்

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் முக்கிய வீரர் ரிஷப் பந்த், இஷாந்த் சர்மா ஆகியோர் காயம் காரணமாக இன்றைய போட்டியில் பங்கேற்க மாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அமித் மிஸ்ரா போட்டிகளில் பங்கேற்காத நிலையில் தற்போது இவர்களும் விலகியுள்ளனர்.

உடல்நிலை தேறிய அஸ்வின்

உடல்நிலை தேறிய அஸ்வின்

முன்னதாக மூத்த ஸ்பின்னர் ஆர் அஸ்வின் தோள்பட்டை காயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்காத நிலையில், தற்போது அவர் உடல்நிலை தேறியுள்ளதாகவும் அதனால் அவர் இன்றைய போட்டியில் பங்கேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ரிஷப் பந்த் ஒரு வார காலத்திற்காவது போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார்.

முதலிடத்தில் காகிசோ ரபடா

முதலிடத்தில் காகிசோ ரபடா

இந்த சீசனில் டெல்லி கேபிடல்சின் பௌலிங் ஆர்டர் சிறப்பாக காணப்படுகிறது. அந்த அணியின் காகிசோ ரபடா 17 விக்கெட்டுகளை வீழ்த்தி ஐபிஎல் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இதேபோல ஆன்ரிச் நோர்ட்ஜே 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அஸ்வின் மற்றும் அக்சார் படேல் ஆகியோர் ஸ்பின்னிங்கில் சிறப்பாக செயல்படுகின்றனர்.

பென் ஸ்டோக்சின் பலம்

பென் ஸ்டோக்சின் பலம்

காயங்களால் டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர்கள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பென் ஸ்டோக்ஸ் இணைந்துள்ளது அணிக்கு சிறப்பான பலமாக பார்க்கப்படுகிறது. மேலும் ஜோஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் டாப் ஆர்டரில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இதனால் இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் பலப்பரிட்சையாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஷார்ஜாவில் நான்கு நாட்களுக்கு முன்பு இதே அணிகள் மோதிய நிலையில் 46 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் அந்த அணியில் இந்த நான்கு நாட்களில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்நிலையில், அவற்றையெல்லாம் சமாளித்து டெல்லி கேபிடல்ஸ் தன்னுடைய பலத்தை நிரூபிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Story first published: Wednesday, October 14, 2020, 17:22 [IST]
Other articles published on Oct 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+