Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ராவுக்கு வந்த அதே நிலைமை.. அர்ஷ்தீப் சிங்கிற்கு என்ன ஆனது.. இந்திய அணிக்கு அடுத்த அடியா??

இந்தூர்: இந்திய அணியில் மேலும் ஒரு முக்கிய பவுலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3வது டி20 கிரிக்கெட் போட்டி இந்தூரில் நடைபெற்றது.

இந்தியாவுக்கு டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெறும் கடைசி போட்டி என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.

3வது டி20 போட்டி

3வது டி20 போட்டி

இப்போட்டியில் அனைவரும் எதிர்பார்த்தபடியே நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோருக்கு ஓய்வு தரப்பட்டிருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங்-ம் வெளியேற்றப்பட்டிருந்தார். அவருக்கும் முதுகுவலி பிரச்சினை இருப்பதாக தகவல் வெளியானது.

ரோகித்தின் விளக்கம்

ரோகித்தின் விளக்கம்

டாஸின் போது, இது குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா, அர்ஷ்தீப் சிங்கிற்கு சிறியதாக முதுகு வலி ஏற்பட்டுள்ளது என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அவருக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது எனவும் கூறினார். மேலும் அவருக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்றும் கூறினார். ஆனால் இதில் தான் சந்தேகம் எழுந்துள்ளது.

பும்ராவின் நிலை

பும்ராவின் நிலை

இந்தியாவின் முன்னணி பவுலரான ஜஸ்பிரித் பும்ராவுக்கும் முதலில் முதுகு வலி பிரச்சினை என்று தான் கூறப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் ஓய்வில் இருப்பதாகவும் தான் கூறினர். ஆனால் அதன்பின்னர் டி20 உலகக்கோப்பையில் இருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது அர்ஷ்தீப் சிங்கிற்கும் அதே நிலைமை வந்துள்ளது.

ரசிகர்களுக்கு கவலை

ரசிகர்களுக்கு கவலை

ஜஸ்பிரித் பும்ரா இல்லாத சமயத்தில் இந்திய அணிக்கு டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்படுவது அர்ஷ்தீப் சிங் மட்டும் தான். புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்ஷல் பட்டேல் இருவரும் ரன்களை வாரி வழங்குகின்றனர். இவர்களுக்கு உதவுவதற்காக தான் தீபக் சஹார் பயன்படுத்தப்பட்டு வருகிறார். இந்த சூழலில் தான் அர்ஷ்தீப் சிங் குறித்தும் கவலை எழுந்துள்ளது.

Story first published: Wednesday, October 5, 2022, 6:30 [IST]
Other articles published on Oct 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+