இந்த விஷயத்தில் கோலியை அடிச்சுக்கவே முடியாது..!! அவரு தாங்க இதுல கிங்..!
Recommended Video
மும்பை: இன்ஸ்டாகிராமில் வீடியோ, பதிவிடுவதில் அதிக வருமானம் ஈட்டும் பிரபலங்களின் பட்டியலில் கோலி முன்னணியில் இருக்கிறார்.
இந்திய கேப்டன் விராட் கோலி, களத்தில் இருப்பது போல இன்ஸ்டாகிராமில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பவர். ஏராளமான ரசிகர்களை கொண்ட இவருக்கு இன்ஸ்டாகிராமில், 3 கோடியே 60 லட்சத்திற்கும் அதிகமான பாலோயர்ஸ் இருக்கின்றனர்.
அதேபோல், பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவும் ஏராளமான பாலோயர்களை பெற்றிருக்கிறார். 4.30 கோடி பாலோயர்சுகளை வைத்துள்ள பிரியங்கா சோப்ரா, தான் பதிவிடும் ஒரு போஸ்ட் மூலம், 1.86 கோடி ரூபாயை சம்பாதிக்கிறார்.

கோலியின் ரூ.1.35 கோடி
அதே போல், கோலி, தான் பதிவிடும் ஒவ்வொரு போஸ்டுக்கும் 1.35 கோடி ரூபாய் வருமானம் பெறுகிறார். இந்த பட்டியலில் அமெரிக்க டிவி நடிகையும், மாடலுமான கைலி ஜென்னரும் உள்ளார். அவர் ஒரு பதிவுக்கு 8.73 கோடி ரூபாய் வருவாயுடன் முதலிடத்தில் இருக்கிறார்.

பட்டியலில் 9வது இடம்
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்வதற்கு அதிக தொகையை ஊதியமாக பெறும் விளையாட்டு வீரர்கள் பட்டியல் வெளியாகி இருக்கிறது. அந்த பட்டியலில் 9வது இடத்தை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பெற்று உள்ளார்.

முதலிடத்தில் ரொனால்டோ
அவரது பக்கத்தை 3.6 கோடி பேர் பின்தொடர்கின்றனர். கோலி இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவுக்கு ரூ.1,35,66,749 ரொக்கம் பெறுகிறார். முதல் இடத்தில் பிரபல கால் பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளார். அவர் ரூ. 6,73,49,082 பெறுகிறார்.

கோலி ஒருவரே
2வது இடத்தில் பிரேசில் கால்பந்து வீரர் நெய்மரும், 3வது இடத்தில் அர்ஜென்டினா கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சியும் உள்ளனர். 4வது இடத்தில் இங்கிலாந்து கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் இருக்கிறார். முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ள வீரர்களில் கோலி மட்டுமே கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications