Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவுக்கு வந்த கண்டம்.. பவுண்டரி தூரம் 55 மீ, ஆனா அடிக்க முடியாது.. ஆக்லாந்து பிட்ச் வைத்த ஆப்பு

ஆக்லாந்து: இந்திய - நியூசிலாந்து அணிகள் விளையாடவுள்ள ஆக்லாந்து மைதானத்தில் பல்வேறு சுவாரஸ்ய விஷயங்கள் அடங்கியுள்ளன.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து ரசிகர்களின் கவனம் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மீது திரும்பியுள்ளது.

இரு அணிகளும் மோதும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நாளை தொடங்குகிறது. முதல் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.

 சுவாரஸ்யங்கள்

சுவாரஸ்யங்கள்

இந்நிலையில் இந்த மைதானத்தில் தான் பல சுவாரஸ்யங்கள் அடங்கியுள்ளன. இங்கு நடைபெற்ற பெரும்பாலான போட்டிகள் படு சுவாரஸ்யத்துடன் தான் முடிந்துள்ளன. ஆக்லாந்து மைதானம் தான் உலகிலேயே மிகவும் சிறிய மைதானமாக பார்க்கப்படுகிறது. இங்கு தான் ஒரு அணி அதிக ஸ்கோரையும் அடிக்க முடியும், இங்கு தான் குறைந்த ஸ்கோரையும் அடிக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா?

எப்படி அது சாத்தியம்?

எப்படி அது சாத்தியம்?

ஆக்லாந்தில் உள்ள பிட்ச்-ல் இருபுறமும் உள்ள பவுண்டரிகளின் ஸ்ட்ரெய்ட் திசையில் 55 மீட்டர்களும், இரு புறங்களும் 65 மீட்டர்களும் மட்டுமே இருக்கும். இதனால் பந்து சரியாக பேட்ஸ்மேன்கள் பேட்டில் பட்டால் மட்டும் போதும், சிக்ஸர் தானாக சென்று விடும். சற்று ஆக்ரோஷமாக அடித்துவிட்டால், மைதானத்தை விட்டே வெளியே போவதையும் நாம் இங்கு பார்க்கலாம். ஆனால் இங்கு ரன்களை அடிப்பதிலும் ஒரு சிக்கல் உள்ளது.

என்ன காரணம்

என்ன காரணம்

இந்த பிட்ச்-ல் பேட்டிங் எந்த அளவிற்கு உள்ளதோ, அதே அளவிற்கு பவுலிங்கிற்கும் சாதமாக இருக்கும். முதல் சில ஓவர்களில் வேகப்பந்துவீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். அதன்பின்னர் பிட்ச் ஸ்லோவாகிவிடும் என்பதால் பேட்ஸ்மேன்கள் அடிப்பார்கள். அப்போது மிடில் ஆர்டரில் ஸ்பின்னர்களால் மட்டுமே காப்பாற்ற முடியும்.

 சராசரி ஸ்கோர் என்ன

சராசரி ஸ்கோர் என்ன

என்னதான் ஆக்லாந்து மைதானம் சிறியதாக இருந்தாலும், இங்கு சராசரி ஸ்கோர் 220 ரன்கள் மட்டுமே ஆகும். இதே மைதானத்தில் இந்திய அணி 314 ரன்களையும் குவித்துள்ளது, 108 ரன்களுக்கு ஆல் அவுட்டும் ஆகியுள்ளது. எனவே சற்று ஜாக்கிரதையாக தான் விளையாட வேண்டும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

Story first published: Thursday, November 24, 2022, 17:38 [IST]
Other articles published on Nov 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+