Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாதனைக்கு காத்திருக்கும் கோஹ்லி. வரலாறு படைக்க போகும் அஸ்வின்.. ஒரே போட்டியில் பல சுவாரசியங்கள்

கொல்கத்தா: கொல்கத்தாவில் நடக்கும் இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடக்க இருக்கிறது. இந்த போட்டி இன்று நடக்க இருக்கிறது.

இதுவரை கிரிக்கெட் உலகில் செய்யாத பல சாதனைகளை இன்றைய போட்டியில் வீரர்கள் செய்ய முடியும். அணியில் மீண்டும் திரும்பி இருக்கும் அஸ்வின் தொடங்கி கோஹ்லி வரை புதிய வரலாறு படைக்க வரிசைகட்டி காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

இந்திய அணிக்கு மட்டும் இல்லாமல் இலங்கை அணிக்கும் இது முக்கியமான போட்டியாகும். சரியாக சொல்ல வேண்டும் என்றால் இது இலங்கை அணியின் கனவு டெஸ்ட் தொடர்.

 7 வருடத்திற்கு பிறகு

7 வருடத்திற்கு பிறகு

இலங்கை இந்திய மண்ணில் விளையாடும் இந்த டெஸ்ட் போட்டி சரியாக ஏழு வருடத்திற்கு பின் நடக்கிறது. இதற்கு முன் 2009 டிசம்பரில் நடந்த டெஸ்ட் போட்டிதான் இந்தியா இலங்கை மோதியா கடைசி டெஸ்ட் போட்டி. அதன் பிறகு இந்திய மண்ணில் இலங்கைக்கு எதிராக எந்த டெஸ்ட் போட்டியும் நடக்கவில்லை. மேலும் இந்த போட்டியில் ஆடும் இலங்கையின் 'ஏஞ்சலோ மேத்தியூஸ், மற்றும் 'ரங்கனா ஹெராத்' ஆகியோர் மட்டுமே இந்தியாவில் டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளனர்.

 துரத்தி வரும் கோஹ்லி

துரத்தி வரும் கோஹ்லி

ஒருநாள் போட்டியில் இந்தியாவின் சிறந்த கேப்டனாக இருக்கும் கோஹ்லி டெஸ்ட் போட்டிகளிலும் சாதனை படைக்க வாய்ப்பு இருக்கிறது. டெஸ்ட் கேப்டன்களில் 60 போட்டிகளில் விளையாடி 27 வெற்றிகளை பெற்றிருக்கும் டோணிதான் தற்போது முதல் இடத்தில் இருக்கிறார். கங்குலி அதற்கு அடுத்தபடியாக 49 போட்டிகளால் விளையாடி 21 வெற்றிகளை பெற்று இருக்கிறார். ஆனால் கோஹ்லி வெறும் 29 போட்டிகளால் 19 வெற்றிகளை பெற்றுள்ளார். இந்த தொடரை வெல்வதன் மூலம் அவர் கங்குலியை பின்னுக்கு தள்ளுவார்.

 அஸ்வினின் ஆட்டம் தொடரும்

அஸ்வினின் ஆட்டம் தொடரும்

இந்திய வீரர் அஸ்வின் பெரும் கஷ்டத்திற்கு பிறகு மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி இருக்கிறார். இதுவரை இவர் 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இத்தனை போட்டிகளில் இவர் மொத்தம் 292 விக்கெட்டுகளை எடுத்து உள்ளார். ஆஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லி 56 போட்டிகளில் விளையாடி 300 விக்கெட்டுகள் என்ற சாதனையை படைத்தார். இந்த போட்டியில் 8 விக்கெட் எடுப்பதன் மூலம் அஸ்வின் இந்த சாதனையை முறியடிக்க முடியும். இல்லையென்றாலும் இந்த தொடரில் மொத்தமாக 8 விக்கெட் எடுத்தாலும் அஸ்வின் சாதனை மன்னனாக மாறுவார்.

 இலங்கையின் தவம்

இலங்கையின் தவம்

இந்த போட்டி இலங்கை அணிக்கு பெரிய கனவு போட்டியாகும். இதுவரை இந்திய மண்ணில் நடந்த எந்த டெஸ்ட் போட்டியிலும் இலங்கை வென்றது இல்லை. இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் 7 போட்டிகளை இலங்கை டிரா செய்து இருக்கிறது. 10 போட்டிகளால் தோல்வி அடைந்து இருக்கிறது. இன்றைய போட்டியில் வெல்லும் பட்சத்தில் அது இலங்கை அணியின் முதல் வெற்றியாக இருக்கும். இலங்கையின் பல வருட கனவின் முடிவு இன்றைய போட்டியில் தெரியும்.

Story first published: Thursday, November 16, 2017, 10:57 [IST]
Other articles published on Nov 16, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+