300 ரன் சாதாரணம்.. வரலாற்றில் இல்லாத அளவுக்கு பவுலிங் தரம் வீழ்ந்துவிட்டது: டீன் ஜோன்ஸ்
சிட்னி: 300 ரன்களுக்கு மேல் சேகரிக்காவிட்டால் அந்த அணி, தோல்வியை ஒப்புக்கொண்டு கிளம்விட வேண்டிய நிலையில்தான் இன்றைய ஒருநாள் போட்டிகள் அமைந்துள்ளன என்றும், உலக அளவில் பவுலிங் தரம் இதுவரை இல்லாத அளவுக்கு தாழ்ந்து போயுள்ளதாக ஆஸ்திரேலிய முன்னாள் பேட்ஸ்மேன் டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய பத்திரிகையில் டீன் ஜோன்ஸ் எழுதியுள்ளதாவது: பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் நடுவேயான சரிசம போட்டி என்பது குறைந்துவிட்டதாக உலகின் எல்லா பகுதிகளிலும் கூக்குரல்கள் கேட்கின்றன.
அந்த குற்றச்சாட்டில் உண்மை இருக்கலாம். ஆனால் பவுலிங் திறமை மிக மோசமான அளவுக்கு உலகெங்கும் குறைந்துவிட்டதையும் கவனிக்க வேண்டும்.

பேட்ஸ்மேனை படியுங்கள்
சரியான அளவு மற்றும் சரியான உயரத்தில் பவுலர்கள் பந்து வீச வேண்டியது அவசியம். பேட்ஸ்மேன்கள் எந்த பகுதியில் வலிமையானவர்கள் என்பது குறித்து பவுலர்கள் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும்.

தொடர்ச்சியாக ஆட்டம்
அடுத்தடுத்து கிரிக்கெட் ஆட்டங்கள் நடப்பதும், வீரர்கள் உடல் தகுதியை பாதிக்கிறது. வீரர்கள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருப்பதை பார்த்து எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இதுபோன்ற சூழலில் நல்ல ஒரு வீரரை எவ்வாறு உருவாக்குவது?

ரன் குவிப்பு சாதாரணம்
கடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு, ஒருநாள் கிரிக்கெட்டின் வடிவமே மாறிவிட்டதை போல உணருகிறேன். 300 ரன்களுக்கு மேல் ரன்கள் எடுப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது.

300 அவசியம்
முதலில் பேட் செய்து 300 ரன்கள் எடுக்க முடியாவிட்டால், தோல்வியை ஒப்புக்கொண்டு மைதானத்தை விட்டு வெளியேறிவிட அந்த அணி ஆயத்தமாக வேண்டியிருக்கிறது.

தலை சொரியும் பவுலர்கள்
பிட்சுகள் முழுக்க பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக உருவாக்கப்படுகிறது. எனவே பந்துகள் பவுண்டரி செல்வதை பார்த்து பவுலர்கள் அடிக்கடி தலையை சொரியும் காட்சி சாதாரணமாகிவிட்டது.

உள்ளே, வெளியே
இப்போதைக்கு இதுபோன்ற பிட்சுகள் மாற்றியமைக்கப்படும் என்று நான் கருதவில்லை. எனவே பவுலர்கள் அதற்கு ஏற்ப தங்களை தயார் செய்துகொள்ள வேண்டியது அவசியம். புதிய மாற்றத்திற்கு தயாராக இல்லாத பவுலர்கள் வெளியேற்றப்படுவதற்கு வாய்ப்பு அதிகம்.

ஸ்விங் இல்லை
பந்துகள் இப்போது ஸ்விங் ஆவதில்லை. குக்கும்புரா பந்தில் மாற்றம் வந்துவிட்டது. இது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பெரிய கஷ்டமான காரியமாக உள்ளது. ஸ்பின்னர்களும் சொல்லிக்கொள்ளும்படி பந்து வீசுவதாக தெரியவில்லை.

தரம் வீழ்ச்சி
சர்வதேச அளவில், பவுலிங் தரம் இதுவரை இல்லாத அளவுக்கு தாழ்ந்து போயுள்ளது. ஆஸ்திரேலியாவின் மிச்சேல் ஸ்டார்க்கை தவிர்த்து வேறு எந்த வேகப்பந்து வீச்சாளரும், 150 கி.மீக்கு மேல் வேகத்தில் பந்து போடுவதில்லை.


Click it and Unblock the Notifications