Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"ஏன் இப்படியொரு முடிவை எடுத்தீங்க; இப்போ எல்லாம் போச்சே" - கோலியை விமர்சிக்கும் இன்சமாம்

லீட்ஸ்: இந்திய அணி ஒரு போட்டியில் வென்றால் பாராட்டு மழை பொழிவதும், தோற்றால் கேள்விகளால் துளைப்பதும் வாடிக்கையாகிவிட்டது. இப்போது, ஹெட்டிங்லே டெஸ்ட்டில் இந்திய கேப்டனை நோக்கி ஏகப்பட்ட கேள்விகள் சீறிக் கொண்டு வருகின்றன.

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நேற்று முன்தினம் (ஆக.25) தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார்.

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் பெற்ற வெற்றியின் நம்பிக்கையில் புத்துணர்ச்சியுடன் களமிறங்கிய இந்திய அணி சிறப்பாக விளையாடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆகையால், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி வெறும் 78 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

 ஜோ ரூட் சதம்

ஜோ ரூட் சதம்

பிறகு, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து, நேற்று இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 423 ரன்கள் குவித்துள்ளது. நேற்று (ஆக.26) இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணி, தனது முதல் விக்கெட்டாக ரோரி பர்ன்ஸை இழந்தது. ஷமி ஓவரில் ரோரி பர்ன்ஸ் 61 ரன்களில் போல்டானார். இதையடுத்து ஒன் டவுன் வீரராக டேவிட் மலன் களமிறங்கினார். பிறகு, ஹஸீப் ஹமீத் 68 ரன்களும், டேவிட் மலன் 70 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஜோ ரூட் வழக்கம் போல, இந்திய பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு 121 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். நேற்று இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 423 ரன்கள் குவித்தது. இந்தியாவை விட 345 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

 பேட்டிங் தேர்வு செய்தது ஏன்?

பேட்டிங் தேர்வு செய்தது ஏன்?

ஏறக்குறைய இந்த டெஸ்ட் போட்டி, இந்திய அணியின் கைவிட்டு சென்றுவிட்டது எனலாம். 2ம் நாளிலேயே, இங்கிலாந்து 345 ரன்கள் லீட் வைத்துவிட்டது. இதற்கு பிறகு இந்திய அணி களமிறங்கி, 2ம் இன்னிங்ஸில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியே ஆக வேண்டும். இன்னும் சொல்லப்போனால், இன்று மூன்றாவது நாள், நாளை நான்காவது நாள் என தொடர்ந்து இரண்டு நாட்கள் முழுமையாக பேட்டிங் செய்தாக வேண்டும். அப்போதுதான் இந்தியா மீள முடியும். ஆனால், அப்படி நடப்பதற்கு சாத்தியக்கூறுகள் ரொம்பவே குறைவு. இந்நிலையில், டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது ஏன்? என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம் உல்-ஹக் கேள்வி எழுப்பியுள்ளார்..

 ஏன் இப்படியொரு முடிவு?

ஏன் இப்படியொரு முடிவு?

இதுகுறித்து இன்சமாம் தனது யூடியூப் சேனலில் பேசுகையில், "இங்கிலாந்து அணியை நீங்கள் சில நாட்களுக்கு முன்பு தான் வீழ்த்தி இருந்தீர்கள். லார்ட்ஸ் டெஸ்ட்டில், கடைசி நாளில் நிலவிய டிரை பிட்சில், இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கை முற்றிலும் சீர்குலைத்தீர்கள். அப்படியிருக்கையில், ஏன் இந்த டெஸ்ட்டில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தீர்கள்? நீங்கள் அவர்களை அல்லவா பேட்டிங் செய்ய வைத்திருக்க வேண்டும்? இங்கிலாந்து 78 ரன்களில் ஆல் அவுட் ஆகியிருக்கும் என்று சொல்ல மாட்டேன். ஆனால், நிச்சயம் அதிக ரன்களை அடித்திருக்க முடியாது.

 எந்த பிரயோஜனமும் இல்லை

எந்த பிரயோஜனமும் இல்லை

முதல் இன்னிங்ஸில், இந்திய பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்து பவுலர்களுக்கு எந்த இடத்திலும் பிரஷர் கொடுக்கவில்லை. ஒரு கிரிக்கெட் வீரராக, ஆடுகளத்தின் தன்மை எதுவாக இருந்தாலும், ஸ்விங் அல்லது ஸ்பின் என எதுவாக இருந்தாலும், நீங்கள் 25-30 பந்துகளை விளையாடியிருந்தால், உங்கள் கண்கள், உங்கள் கண் ஒருங்கிணைப்பு, உங்கள் கை ஒருங்கிணைப்பு, இவை அனைத்தும் ஆடுகளத்திற்கு பழக்கமாகிவிடும். அப்படி இருக்கையில் நீங்கள் குறிப்பிட்ட பந்துகளை சந்தித்த பிறகு உங்களது வழக்கமான ஷாட்ஸ்களை அடிக்க ஆரம்பித்துவிட வேண்டும். ரோஹித் ஷர்மா 105 பந்துகளை சந்தித்தார். ஆனால், அவர் கடைசி வரை தனது ஷாட்ஸ்களை ஆடாமல் களத்தில் இருந்தார். அதனால் என்ன பயன்? நீண்ட நேரம் களத்தில் நிற்பதால், நீங்கள் பவுலர்கள் மீது என்ன பிரஷர் போட முடியும்? உங்களுடைய ஷாட்ஸ்களை ஆட வேண்டியது உங்களின் பொறுப்பு. விராட் கோலி கூட 31 பந்துகளை சந்தித்தார். ஆனால், அவர் செய்தது என்ன? வெறும் 7 ரன்களை அடித்தார். அவ்வளவு தான்" என்று இன்சமாம் பேசியுள்ளார்.

Story first published: Friday, August 27, 2021, 13:13 [IST]
Other articles published on Aug 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+