For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

செல்வாக்கை பயன்படுத்தி மகனை அணியில் சேர்த்தாரா இன்சமாம்? பாக். கிரிக்கெட்டில் சர்ச்சை

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மற்றும் தற்போதைய கிரிக்கெட் அணி தேர்வாளர் இன்சமாம் உல் ஹக் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

அவர் தன் பதவியின் செல்வாக்கை பயன்படுத்தி மகனுக்கு ஜூனியர் அணியில் இடம் பெற்றுக் கொடுத்துள்ளார் என்ற புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரை பாகிஸ்தான் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் அப்துல் காதிர் கூறியுள்ளார். இது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. இதன் மறுத்துள்ள இன்சமாம், இதை நிரூபித்தால் பதவி விலக தயார் என அறிவித்துள்ளார்.

என்ன புகார்?

என்ன புகார்?

இன்சமாமின் மகன் சமீபத்தில் 19 வயதுக்கு உட்பட்டோர் அணியில் சேர்க்கப்பட்டார். இன்சமாமின் மகன் முதலில் அணியில் சேர்க்கப்படவில்லை எனவும், அதன் பின் இன்சமாம் ஜூனியர் அணி தேர்வாளர் பாசித் அலிக்கு அழுத்தம் கொடுத்து தன் மகனை அணியில் இணைத்தார் என குற்றம் சாடியுள்ளார் அப்துல் காதிர்.

இன்சமாம் மறுப்பு

இன்சமாம் மறுப்பு

இதை கடுமையாக மறுத்துள்ள இன்சமாம், இதை நிரூபித்தால் தான் பதவி விலக தயாராக இருப்பதாகவும், மேலும், இந்த விஷயத்தை தான் அவ்வளவு எளிதில் விட மாட்டேன். பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவரை பார்த்து பேச உள்ளேன் எனவும் கூறினார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் ஆதரவு

பாகிஸ்தான் கிரிக்கெட் ஆதரவு

இன்சமாம், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் எஹ்சான் மானியை சந்தித்தார். அதன் பின் இந்த விவகாரத்தில் எந்த தவறும் நடக்கவில்லை என இன்சமாமுக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளது கிரிக்கெட் போர்டு.

ஜூனியர் அணி தேர்வாளர் மறுப்பு

ஜூனியர் அணி தேர்வாளர் மறுப்பு

இந்த நிலையில் ஜூனியர் அணி தேர்வாளர் பாசித் அலியும், அப்துல் காதிர் சொன்ன புகார்களை மறுத்துள்ளார். தனக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை என கூறியுள்ளார் அவர். எல்லோரும் அப்துல் காதிர் புகாரை மறுத்துவிட்ட நிலையில், அப்துல் காதிர் சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு என்ன ஆதாரம் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே போல, இன்சமாம் தன் உறவினரான இமாம் உல் ஹக்-ஐ தேசிய அணியில் தேர்ந்தெடுத்த போதும், இதே போல பிரச்சனை எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, September 15, 2018, 12:27 [IST]
Other articles published on Sep 15, 2018
English summary
Inzamam Ul Haq accused of using influence for his son’s selection in under 19 team
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+