For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாகிஸ்தான் பயிற்சியாளராகிறார் இன்சமாம் உல் ஹக்?

கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமைப் பயிற்சியாளராகும் வாய்ப்பு முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்குக்கு பிரகாசமாகியுள்ளது. அவரது பெயரை தற்போது தலைமைப் பயிற்சியாளர்களுக்கான பரிந்துரைப் பட்டியலில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சேர்த்துள்ளது.

அதேசமயம், இன்சமாம் உல் ஹக்குடன் வாரியத் தலைவர் ஷஹாரியார் கான் ஏற்கனவே பேசி விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே ஹக் தலைமைப் பயிற்சியாளராகும் வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.

Inzamam-ul-Haq likely to become Pakistan's chief selector

இருப்பினும் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த செய்தியும் வாரியத் தரப்பிலிருந்து வெளியாகவில்லை. இதுகுறித்து வாரியத்திற்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில், இதுவரை எதுவும் முடிவாகவில்லை. இன்சமாம் உல் ஹக் மற்றும் ரஷீத் லத்தீப் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன என்றார்.

இன்சமாம் ஹக் தற்போது ஆப்கானிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக உள்ளார். அந்த அணி டி20 உலகக் கோப்பையில் தோல்வியைச் சந்தித்து வெளியேறினாலும் கூட சிறப்பாக ஆடியது மேற்கு இந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தி அசத்தவும் செய்தது நினைவிருக்கலாம்.

பாகிஸ்தான் அணிக்காக 120 டெஸ்ட், 398 ஒரு நாள் போட்டிகளில் இன்சமாம் உல் ஹக் ஆடியுள்ளார். கடந்த ஆண்டுதான் அவர் ஆப்கானிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக சேர்ந்தார். அவருடன் இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் மனோஜ் பிரபாகரும் இணைந்து பணியாற்றினார்.

தற்போதைய பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ், டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பின்னர் விலகி விட்டார். அதேபோல டி20 கேப்டன் ஷாஹரித் அப்ரிதியும் விலகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, April 15, 2016, 17:58 [IST]
Other articles published on Apr 15, 2016
English summary
The Pakistan Cricket Board (PCB) has widened its hunt for a new chief selector by including Inzamam-ul-Haq in the list of contenders after the former captain expressed his interest in the job. A reliable source in the Board confirmed that PCB Chairman Shaharyar Khan was in touch with Inzamam and Rashid to discuss the possibility of giving one of them the responsibility of chief selector.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+