For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே நேரத்தில் 2 இந்திய அணி.. பிசிசிஐ-ன் புதிய முயற்சி.. உலகிலேயே இதுதான் முதல்முறை!

இதுவரை எந்த நாடு செய்திராத ஒரு புது முயற்சியை இந்திய அணி செய்யவுள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி அடுத்தடுத்த மாதங்களில் இங்கிலாந்து மற்றும் இலங்கை நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

டி20 உலகக்கோப்பையை மனதில் வைத்தும், வருமானத்தை பெருக்கவும் ஒரே நேரத்தில் இரண்டு இந்திய அணிகளை சுற்றுப்பயணம் அனுப்பும் முடிவை பிசிசிஐ கையில் எடுத்துள்ளது.

இங்கிலாந்து சுற்றுப்பயணம்

இங்கிலாந்து சுற்றுப்பயணம்

வரும் ஜூன் 2ம் தேதி இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய அணி அங்கு நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளது. அதன்பிறகு ஆக.4ம் தேதி முதல் செப். 14ம் தேதி வரை இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. மொத்தமாக அடுத்த 3 மாதம் இந்திய அணி இங்கிலாந்தில் முகாமிட உள்ளது.

2வது இந்திய அணி

2வது இந்திய அணி

அதே நேரத்தில் வரும் ஜூலை மாதத்தில் இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுது. ஆனால் இங்கு செல்லவுள்ளது இந்திய 'ஏ' பிரிவு அணியாகும். இதில் ஐபிஎல் தொடரில் அசத்திய இளம் வீரர்கள் செல்லவுள்ளனர். இலங்கைக்கு எதிராக ஜூலை 13ம் தேதி முதல் 3 ஒருநாள் போட்டிகளிலும், ஜூலை 22ம் தேதி முதல் 3 டி20 போட்டிகளிலும் விளையாடவுள்ளது. வரும் அக்டோபர் மாதம் டி20 உலகக்கோப்பை நடைபெறவுள்ளதால் இளம் வீரர்களையும் அதற்காக தயார்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் போடப்பட்டுள்ளது.

சாதனை

சாதனை

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்சமாம் உல் அக், 2 இந்திய அணிகளை வெவ்வேறு நாடுகளுக்கு ஒரே நேரத்தில் அனுப்பும் முயற்சி வித்தியாசமாக உள்ளது. இன்று இந்தியா செய்யும் இந்த முயற்சியை ஆஸ்திரேலியா எப்போதே செய்ய முயற்சித்தது. ஆனால் அவர்களுக்கு அனுமதி கிடைக்காததால் செய்ய முடியவில்லை. இதனால் உலகில் ஒரே நேரத்தில் இரண்டு சர்வதேச அணிகளை சுற்றுப்பயணம் அனுப்பும் முதல் நாடு இந்தியா ஆகும்.

50 வீரர்கள் தயார்

50 வீரர்கள் தயார்

இந்திய அணிக்கு தற்போது அதிகப்படியான தரமான வீரர்கள் உள்ளனர். இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வீரர்களை பார்த்தீர்கள் என்றால், அவர்கள் இந்தியாவின் முதல்தர அணி போன்று தான் இருக்கும். அப்படிபட்ட பலம் உள்ளது. ஐபிஎல் தொடர் இந்திய அணியின் பலத்திற்கு பெரும் உதவியாக உள்ளது. தற்போது இந்தியாவில் கிட்டத்தட்ட 50 வீரர்கள் சர்வதேச போட்டிகளில் விளையாட தயாராக இருப்பார்கள்.

Story first published: Thursday, May 20, 2021, 20:29 [IST]
Other articles published on May 20, 2021
English summary
Inzamam-ul-Haq says India is first country to assemble two national teams at same time
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+