Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய ஒலிம்பிக் சங்கம் அதிரடி.. தேசிய மல்யுத்த கூட்டமைப்பின் தற்காலிக குழுவை கலைத்து உத்தரவு

டெல்லி : இந்திய ஒலிம்பிக் சங்கம் திங்களன்று மல்யுத்த கூட்டமைப்பின் தற்காலிகக் குழுவை கலைத்தது. தேசிய மல்யுத்த கூட்டமைப்பின் இடைநீக்கம் நீதிமன்றத்தால் நீக்கப்பட்ட பிறகு, அந்த கூட்டமைப்பை மற்றொரு குழு கொண்டு நிர்வகிக்க வேண்டிய அவசியம் இல்லை ஏனம் முடிவு செய்து இருக்கிறது இந்திய ஒலிம்பிக் சங்கம்.

மேலும் தேசிய மல்யுத்த கூட்டமைப்பிற்கு முழு நிர்வாக அதிகாரத்தையும் அளித்தது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டிக்கான தேர்வுச் சோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்ததன் மூலம் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் கூறியது, இதற்காக அமைக்கப்பட்ட தற்காலிக குழு, தேசிய மல்யுத்த கூட்டமைப்புடன் உடன் இணைந்து பணியாற்றியது.

IOA decided to dissolves ad-hoc committee for WFI after trials were completed


உலக மல்யுத்த அமைப்பும் தேசிய மல்யுத்த கூட்டமைப்பிற்கு விதித்த தடையை நீக்கி இருந்தது. மேலும், வீரர்களுக்கான தேர்வு சோதனைகள் சுமூகமாக நடத்தப்பட்ட நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கம், தற்காலிக குழு மூலம் தேசிய மல்யுத்த கூட்டமைப்பின் செயல்பாடுகளை தொடர்ந்து நடத்துவது தேவையற்றது என்று கருதுகிறது. இந்த நடவடிக்கை இந்திய மல்யுத்தத்திற்கான இயல்புநிலை மற்றும் ஸ்திரத்தன்மைக்கு திரும்புவதைக் குறிப்பதாக கூறி உள்ளது. மேலும், அதன் வழக்கமான நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் தேசிய மல்யுத்த கூட்டமைப்பு அதன் செயல்பாடுகளை மீண்டும் தொடங்க அனுமதிக்கிறது.

அடுத்த மாதம் கிர்கிஸ்தானில் நடைபெறவுள்ள ஆசிய சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான அணிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான சோதனைகளை தற்காலிக குழு மேற்பார்வையிட்டு நடத்தி முடித்தது.

வீரர்களுக்கான அந்த சோதனையில் வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா என தேசிய மல்யுத்த கூட்டமைப்பை எதிர்த்த இரண்டு வீரர்களும் போட்டியிட்டனர். மேலும் அவர்கள் 50 கிலோ பிரிவில் ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

அந்த சோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, இந்திய மல்யுத்த விளையாட்டின் நிர்வாகம் மீண்டும் தேசிய மல்யுத்த கூட்டமைப்பிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது.

Story first published: Monday, March 18, 2024, 19:31 [IST]
Other articles published on Mar 18, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+