IPL 2008 ஏலம்…!! அப்பவே தல தோனியின் ரேட் ரூ.10.5 கோடி…! இணையத்தை கலக்கும் வைரல் டுவீட்
Recommended Video
மும்பை:ஐபிஎல் தொடரில் 2008ம் ஆண்டு ஏலத்தின் போது மகேந்திர சிங் தோனி ரூ.10.5 கோடிக்கு வாங்கப்பட்ட விவரம் இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.
இந்தியாவின் வெற்றிக்கரமான கிரிக்கெட் திருவிழாவாக சாதனை படைத்திருப்பது ஐபிஎல் தொடர். உள்நாட்டு வீரர்கள், வெளிநாட்டு வீரர்கள் என கலவையான அணியாக உருமாறியாக போது யாரும் இந்தளவுக்கு சக்சஸ் ஆகும் என்று ஐபிஎல் நிர்வாகமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

வீரர்களை ஏலத்தின் வழியே அணிக்கு எடுப்பது என்ற நடைமுறையே ஐபிஎல் தொடக்க காலத்தில் கேள்விக்குள்ளானது. கேலியாக பார்க்கப்பட்டது. பின்னர் ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களின் பங்களிப்பு, அணிகளின் வெற்றி,தோல்விகள் ஐபிஎல் தொடரை ஆண்டுதோறும் நடத்துவதற்கு வாய்ப்பாக அமைந்தது.
இந்த சமயத்தில் 11 ஆண்டுகளுக்கு முன்பு... அதாவது 2008ம் ஆண்டு தல தோனி எவ்வளவு விலை கொடுத்து சென்னை அணிக்கு வாங்கப்பட்டார் என்ற விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. விலையை கேட்டால் மயக்கம் வராத குறைதான்.
கிட்டத்தட்ட ரூ.10.5 கோடிக்கு தோனி சென்னை அணியினால் ஏலத்தில் விலை கொடுத்து வாங்கப்பட்டிருக்கிறார். ஐபிஎல் வீரர்களை ஏலம் விடுவதில் அனைவராலும் அறியப்பட்ட ரிச்சர்ட் மேட்லி இந்த விவரத்தை வெளியிட்டுள்ளார்.
தமது டுவிட்டர் பக்கத்தில் அவர் இந்த முழு விவரங்களையும் வெளியிட்டு இருக்கிறார். அதாவது.. 40 ஆயிரம் டாலர்கள் அடிப்படை விலை என்ற அடிப்படையில் விலை வைத்து வாங்கப்பட்டிருக்கிறார் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 10.5 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினால் தல தோனி வாங்கப்பட்டிருக்கிறார். இந்த தகவல் தற்போது இணையத்தை வலம் வந்து கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications