Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'வித்தை' காட்டி வெற்றிக்கொடி நாட்டிய கோஹ்லி!

பெங்களூர்: இதுவரை ஐபிஎல்லில் இப்படி ஒரு ஆட்டத்தை ஆடியிருக்கவில்லை என்று சொல்லும் அளவுக்கு நேற்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக நடந்த போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி பிரமாதப்படுத்தி விட்டார்.

அதிரடியாக ஆடிய அவர் 93 ரன்களைக் குவித்து தனது அணியை வெற்றிக் கட்டிலில் ஏற்றி வைத்தார் கோஹ்லி.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் கோஹ்லி ஆடிய விதம், பெங்களூர் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் மூழ்கடித்தது. இப்போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.

கோஹ்லியின் டாப் பார்ம்

நேற்றைய போட்டியில் அட்டகாசமான பார்மில் இருந்தார் கோஹ்லி. வந்த பந்துகளையெல்லாம் அவர் அடித்துத் துவைத்து ரன்னாக்கினார்.

IPL 2013 Match 9 Highlights: RCB Vs SRH
பெரும் ஸ்கோரை ஊதித் தள்ளிய கோஹ்லி

161 என்ற பெரிய ஸ்கோரை படு ஈசியாக விரட்டிய பெங்களூர் அணி வெறும் 3 விக்கெட்களை மட்டும் இழந்து 162 ரன்களை எடுத்து வெற்றியைத் தொட்டது.

4 சிக்ஸ்.. 11 பவுண்டரி

நேற்றைய போட்டியின்போது விராத் கோஹ்லி 11 பவுண்டரிகளையும், 4 சிக்ஸர்களையும் விளாசினார்.

ஆட்ட நாயகனும் கோஹ்லியே

நேற்றைய போட்டியின் இறுதியில் ஆட்ட நாயகனாக விராத் கோஹ்லியே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

3 போட்டிகளில் 2 வெற்றி

இதுவரை 3 போட்டிகளில் ஆடியுள்ள பெங்களூர் அணிக்கு இது 2வது வெற்றியாகும்.

சன்னுக்கு முதல் தோல்வி

அதேசமயம் அடுத்தடுத்து 2 அதிரடி வெற்றிகளை ஈட்டியிருந்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு இது முதல் தோல்வியாகும்.

ஐபிஎல் போட்டிகளில் இதுவே அதிகபட்சம்

விராத் கோஹ்லி நேற்று எடுத்த 93 ரன்களே ஐபிஎல் போட்டி ஒன்றில் அவர் எடுத்த அதிகபட்ச ரன்னாகும்.

ஆனா தொப்பி போச்சே

ஆனால் தான் வைத்திருந்த ஆரஞ்சு தொப்பியை நேற்று மும்பை வீரர் திணேஷ் கார்த்திக்கிடம் பறி கொடுத்தார் கோஹ்லி. அதாவது அதிக ரன்கள் குவித்த வீரராக நேற்று திணேஷ், கோஹ்லியை ஓவர் டேக் செய்ததால் தொப்பி போனது.

2வது முறையாக ஏமாற்றிய கோஹ்லி

கடந்த போட்டியைப் போலவே நேற்றைய போட்டியிலும் கிறிஸ் கெய்லி சரியாக ஆடாமல் ஏமாற்றினார்.

கூட்டம் சேரலை

நேற்றைய போட்டியின்போது பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் கூட்டம் அதிகம் இல்லாதது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

Story first published: Wednesday, April 10, 2013, 12:12 [IST]
Other articles published on Apr 10, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+