Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்து அணியில் சேர்க்கப்படாத கோபத்தில் ஹைதராபாத்துக்காக ஆட வருகிறார் பீட்டர்சன்!

ஹைதராபாத் அணிக்காக ரூ.2 கோடி செலவில் ஏலத்தில் வாங்கப்பட்டவர் கெவின் பீட்டர்சன். இங்கிலாந்து நாட்டின் அதிரடி வீரரான பீட்டர்சன், வெகு காலமாக அந்த அணியில் சேர்க்கப்படாமல் உள்ளார்.

எனவே, இங்கிலாந்து அணிக்காக எப்படியும் விளையாட வேண்டும் என்ற நோக்கத்தில், ஐபிஎல் தொடரை பீட்டர்சன் புறக்கணித்து வந்தார். ஆனால், இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள மாஜி வீரர் ஆன்ட்ரூ ஸ்டார்ஸ், பீட்டர்சனை மீண்டும் அணியில் சேர்க்கப்போவதில்லை என்று கூறிவிட்டார்.

IPL 2015: 'Angry and hurt' Kevin Pietersen to join Sunrisers Hyderabad

இதுகுறித்து பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தனக்கு மிகவும் வேதனை ஏற்பட்டுள்ளதாகவும், ஐபிஎல் தொடரில் ஆடி வேதனையை போக்க உள்ளதாகவும் பீட்டர்சன் கூறியுள்ளார்.

ஹைதராபாத் அணியும், பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்புள்ள ஒரு அணியாகும். ஆனால், இன்னும் தகுதி பெறவில்லை. 2 லீக் ஆட்டங்கள் அந்த அணிக்கு எஞ்சியுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை, மும்பைக்கு எதிராக கடைசி லீக்கில் அந்த அணி ஆடும். அதில், பீட்டர்சன் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, May 13, 2015, 14:09 [IST]
Other articles published on May 13, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+