Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன வேணா சொல்லுங்க… கவலையில்லை… பஸ்சில் ஜோடியாக சுற்றும் கோஹ்லி – அனுஷ்கா

பெங்களூரு: ஆஸ்திரேலியாவிற்கு அனுஷ்கா போய்த்தான் கோஹ்லி ஆட்டம் குளோஸ் ஆச்சு... என்பது நெட்டிசன்களின் தூற்றலாக இருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தனது காதலியை கையோடு கை கோர்த்து போகும் இடம் எங்கும் அழைத்துச் செல்வது கோஹ்லியின் வழக்கமாகிவிட்டது. ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடப்போகும் பெங்களூரு அணிக்கான பேருந்தில் கோஹ்லி-அனுஷ்கா ஜோடி ஒன்றாக பயணம் செய்து இதை போகுமிடம் எங்கும் நிரூபித்து வருகிறது.

கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி- பாலிவுட் ஹீரோயின் அனுஷ்கா சர்மா இருவரும் ஷாம்பு விளம்பர படமொன்றில் இணைந்து நடித்தனர். அப்போது முதல் இருவரும் நெருக்கமாக பழகி வருகின்றனர். அவ்வவ்போது வெளிநாடுகளுக்கு ஜோடியாக டேட்டிங் செல்கின்றனர். இருவரும் காதலிப்பதாக பரபரப்பாக பேசப்பட்டாலும் அதை உறுதி செய்யாமலேயே இருந்தனர்.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியைக் காண சிட்னி சென்றார் அனுஷ்கா சர்மா. இந்த போட்டியில் கோஹ்லி ஒரு ரன் மட்டுமே எடுத்தார். இந்தியா தோல்வியைத் தழுவியது. கோஹ்லி ரன் எடுக்காமல் போனதற்கு அனுஷ்கா சர்மாதான் காரணம் என்று ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் பரவியது. இதற்கு கோஹ்லி கொந்தளித்தார். ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா திரும்பிய போது தனது அனுஷ்காவை கையோடு அழைத்து வந்து காதலை நிரூபித்தார்.

இணைந்த ஜோடி

இணைந்த ஜோடி

இதன் பின்னர் இருவரும் எங்கு சென்றாலும் இணைந்து செல்வது வாடிக்கையாக உள்ளது. சமீபத்தில் டெல்லியில் நடந்த ரெய்னாவின் திருமண நிச்சயதார்த்த விழாவுக்கு ஜோடியாக வந்தனர்.

மாமியாரை சந்தித்த அனுஷ்கா

மாமியாரை சந்தித்த அனுஷ்கா

இதனிடையே, டெல்லி சென்ற போது கோஹ்லியின் வீட்டுக்கு சென்ற அனுஷ்கா, அவரது குடும்ப உறுப்பினர்களுடன் சிறிது நேரம் பேசிவிட்டுத் தான் வந்தாராம்.

கொல்கத்தாவில் ஜோடி

கொல்கத்தாவில் ஜோடி

ஐபிஎல் போட்டிகளின் தொடக்க விழா கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் கோஹ்லி அனுஷ்கா சர்மாவுடன் ஜோடியாக கொல்கத்தா வந்தார்.

மேடையில் நடனம்

மேடையில் நடனம்

தொடக்க விழாவில் அனுஷ்கா நடனம் ஆட, அதை கோஹ்லி ரசித்துப் பார்த்தார். இருவரும் ஒன்றாக கொல்கத்தா வந்தபோதிலும் வெவ்வேறு ஹோட்டல்களில் தங்கினர்.

அனுஷ்காவின் மசாஜ்

அனுஷ்காவின் மசாஜ்

கோஹ்லி தங்கியிருந்த ஐடிசி சோனார் ஹோட்டலுக்கு சென்று அனுஷ்கா தனது காதலனுடன் நேரத்தை செலவிட்டார். ஐடிசி ஹோட்டலில் இருந்த ஸ்பாவுக்கு சென்ற அனுஷ்கா மசாஜ் செய்து கொண்டார்.

ஒரே பேருந்தில் வலம்

ஒரே பேருந்தில் வலம்

ஐ.பி.எல்.8 தொடரில் பெங்களூரு அணி பங்கேற்கும் போட்டிகளில், கோஹ்லியை காண தவறாமல் ஆஜராகி விடுகிறார்.போட்டி முடிந்த பின் அல்லது போட்டிக்கு செல்லும் முன் வீரர்களை ஏற்றிச் செல்லும் பேருந்தில் இருவரும் ஒரே இருக்கையில் அமர்ந்து வலம் வருகின்றனர்.

திருமணம் எப்போது?

திருமணம் எப்போது?

தங்களின் காதலை இருவரும் ஊடகங்களின் முன்பாக வெளிப்படையாக தெரிவித்தாலும் திருமணம் எப்போது என்பதை மட்டும் இன்னமும் உறுதியாக தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, April 20, 2015, 9:58 [IST]
Other articles published on Apr 20, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+