Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோஹ்லி இல்லாத ஐபிஎல் இறுதிப் போட்டியை புறக்கணிக்கும் 'டயர்ட்' அனுஷ்கா

மும்பை: வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் இருப்பதால் நடிகை அனுஷ்கா சர்மா இன்று கொல்கத்தாவில் நடக்கும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டு தனது படம் தில் தக்னே தோவை விளம்பரப்படுத்த மாட்டாராம்.

பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா நடித்துள்ள இந்தி படமான தில் தக்னே தோ வரும் ஜூன் மாதம் 5ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் அதன் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.

அவர்கள் இன்று கொல்கத்தாவில் நடக்கும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டு படத்தை விளம்பரப்படுத்த உள்ளனர்.

அனுஷ்கா

அனுஷ்கா

அனுஷ்கா சர்மாவுக்கு வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவரை ஓரிரண்டு நாட்களுக்கு ஓய்வு எடுக்குமாறு மருத்துவர் வலியுறுத்தியுள்ளார் என்று அவரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் ஃபைனல்

ஐபிஎல் ஃபைனல்

டாக்டர் ஓய்வெடுக்குமாறு கூறியதால் இன்று கொல்கத்தாவில் நடக்கும் இறுதிப் போட்டியின்போது நடக்கும் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் அனுஷ்கா கலந்து கொள்ளப் போவது இல்லை. கொல்கத்தாவில் நடந்த ஐபிஎல் துவக்க விழாவில் அனுஷ்கா கலந்து கொண்டு நடனம் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோஹ்லி

கோஹ்லி

அனுஷ்கா தனது காதலரும், ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனுமான கோஹ்லி ஆடிய போட்டிகளை நேரில் கண்டு ரசித்தார். பட விளம்பரங்களுக்கு இடையே அவர் தனது காதலரை உற்சாகப்படுத்த ஸ்டேடியத்திற்கு வந்திருந்தார்.

நோட்டீஸ்

நோட்டீஸ்

பெங்களூரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதிய ஐபிஎல் போட்டியை காண அனுஷ்கா ஸ்டேடியத்திற்கு வந்திருந்தார். மழையால் ஆட்டம் கைவிடப்பட்டதும் கோஹ்லி பார்வையாளர்கள் இருந்த இடத்திற்கு சென்று அனுஷ்காவை கட்டிப்பிடித்து பேசினார். இதையடுத்து விதிகளை மீறியதற்காக அவருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, May 24, 2015, 12:51 [IST]
Other articles published on May 24, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+