Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐ.பி.எல் 8: டெல்லி டேர்டெவில்ஸ் தோல்விக்கு கெஜ்ரிவால் ராஜினாமா செய்யணுமாம்ல!

சென்னை: ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் டெல்லி அணி தோல்வியடைந்ததற்கு பொறுப்பேற்று அர்விந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் ஒரு கிரிக்கெட் ரசிகர். இது என்ன புதுகதையா இருக்கு என்கிறீர்களா? இது வலைஞர்களின் கோரிக்கை.

8 வது ஐ.பி.எல்.போட்டியின் 2வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதின. இதில 1 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி "த்ரில்" வெற்றி பெற்றது சென்னை அணி.

முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்களை எடுத்தது. இதை சேஸ் செய்ய களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை எடுத்தது. கடைசி ஓவரின் பரபரப்பு தீயை பற்றவைத்தது இந்தப் போட்டி. கடைசியில் வெற்றியை ருசித்தது சென்னை அணி. சேப்பாக்கம் மைதானத்தில் நள்ளிரவில் வெற்றியை கொண்டாடித் தீர்த்தனர் சென்னை ரசிகர்கள்.

இது ஒருபுறம் இருக்க ட்விட்டரில் நேற்று கிரிக்கெட் திருவிழாதான். #CSKvDD என்ற ஹேஸ் டேக் தான் ட்ரெண்ட் ஆகியது. அதில் சென்னை அணியின் வெற்றியைக் கொண்டாடித் தீர்த்தனர்.

புது மாப்பிள்ளை

புது மாப்பிள்ளை

முக்கியமாக சென்னை அணியின் செல்லப்பிள்ளை சுரேஷ் ரெய்னா இப்போது புது மாப்பிள்ளை வேறு. கடந்தவாரம்தான் அவருக்கு திருமணம் முடிந்தது.

ரெய்னா ஆட்டம்

திருமண தினத்தன்றும் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட ரெய்னா தாலி கட்டிய கையோடு விளையாட வந்துவிட்டார். அவர் இன்னமும் ஹனிமூன் கூட செல்லவில்லை என்பதை நினைவு படுத்தும் விதமாகவும் ட்விட்டியுள்ளனர் சில வலைஞர்கள்.

அட ஹனிமூன் போப்பா

நேற்றைய ஆட்டத்தில் ரெய்னாவின் பீல்டிங் நன்றாக பேசப்பட்டது. சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ரெய்னா இனி நிம்மதியாக மொரிசியஸ்க்கு ஹனிமூன் போகலாம் என்று ட்விட்டியுள்ளார் தன்வி ஷர்மா என்ற ரசிகை

என்னா ஒரு ஆட்டம்

நேற்றைய ஆட்டத்தின் முடிவு பரபரப்பு தீயை பற்றவைத்தது. கடைசி பந்து 6 ரன் தேவை என்ற நிலையில் மார்கல், அந்த பந்தை சிக்சருக்கு அனுப்புவார் என்று நினைக்க அது பவுண்டரியாக மாறியது.

திசை மாறிய காற்று

கடைசியில் சென்னை அணியின் பக்கம் அதிர்ஷ்டக்காற்று திசை மாறியது. ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவேதான் ஆட்டத்தின் முடிவு அனேகம் பேர் ரசித்து ட்விட்டியுள்ளனர்.

விராட் வாழ்த்து

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் ஹோக்லி தம்ஸ் அப் போட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நல்லாத்தானே போகுது

இதுவரை வந்த கமெண்ட்கள் எல்லாம் நன்றாக இருக்க சிக்கன் பிரியாணி என்ற வலைஞரின் கருத்தோ அதிரடியாக உள்ளது. அதாவது டெல்லி டேர் டெவில்ஸ் அணியின் தோல்விக்கு பொறுப்பேற்று அர்விந்த் கெஜ்ரிவால் தனது டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்பதுதான் அது.

அடப்பாவிகளா டெல்லி அணி தோத்துப்போனா அதுக்கு கெஜ்ரிவால் என்னய்யா பண்ணுவாரு. போங்கப்பா போய் வேலையை பாருங்க!

Story first published: Friday, April 10, 2015, 7:48 [IST]
Other articles published on Apr 10, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+