Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வீசியது கெய்ல் புயல்.. கொல்கத்தா வெற்றி பயணத்துக்கு முட்டுக்கட்டை போட்ட பெங்களூர்

கொல்கத்தா: ஐபிஎல் லீக் ஆட்டத்தில் நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ்சை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூரு ராயல்சேலஞ்சர்ஸ் கொல்கத்தாவின் வெற்றி பயணத்துக்கு முட்டுக் கட்டை போட்டது.

கொல்கத்தா தனது முதலாவது லீக் ஆட்டத்தில் மும்பை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய நிலையில், நேற்று இரவு மீண்டும் தனது சொந்த ஊர் மைதானத்திலேயே பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொண்டது.

பெங்களூர் அணிக்கு இது முதல் போட்டி என்பதால், வெற்றியுடன் தொடங்கும் வேகத்துடன் களமிறங்கியது. அதேநேரம், கொல்கத்தா, கடந்த ஐபிஎல் போட்டித் தொடரையும் சேர்த்து தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்றிருந்தது. 11வதாக பெங்களூரையும் வீழ்த்த கொல்கத்தா ஆர்வமாக இருந்தது.

நல்ல தொடக்கம்

நல்ல தொடக்கம்

டாசில் வென்ற பெங்களூரு கேப்டன் விராட் கோஹ்லி, தனது அணி முதலில் பவுலிங் செய்யும் என்றார். இதையடுத்து கொல்கத்தா பேட்டிங்கை தொடங்கியது. கம்பீரும், உத்தப்பாவும் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். 10.4வது ஓவரில் கொல்கத்தா 81 ரன்கள் சேர்த்திருந்தபோது, ராபின் உத்தப்பா 35 ரன்களில் அவுட் ஆனார்.

மிடில் ஆர்டர் பிரச்சினை

மிடில் ஆர்டர் பிரச்சினை

இதன்பிறகு கம்பீர் 58 ரன்கள், மனிஷ் பாண்டே 23 ரன்களில் வெளியேறிய நிலையில், மிடில் ஆர்டர் மொத்தமாக கவிழ்ந்தது. சூர்ய குமார் யாதவ் 11, யூசுப் பதான் 3, ஆன்ட்ரே, சகிப் அல் ஹசன் டக் அவுட் ஆகினர். ஆனால் ஆன்ட்ரே ரசல் கடைசி கட்டத்தில் அதிரடியாக 17 பந்துகளில் 41 ரன்களை குவித்தார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ரன்களை குவித்தது.

ஆட்டம் கண்ட பெங்களூர்

ஆட்டம் கண்ட பெங்களூர்

நரைன் உள்ளிட்ட சிறந்த பவுலர்களுக்கு எதிராக இந்த ஸ்கோரை பெங்களூரால் எட்ட முடியுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு எழுந்தது. பெங்களூரு தொடக்க வீரர்களாக கிறிஸ் கெய்ல் மற்றும் விராட் கோஹ்லி களமிறங்கினர். 4.5 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 21ஆக இருந்தபோது 13 ரன்களில் கோஹ்லி அவுட் ஆனார். இதைத்தொடர்ந்து தினேஷ் கார்த்திக் மற்றும் மந்தீப் சிங் தலா 6 ரன்கள் எடுத்து அவுட் ஆனதால், பெங்களூரு சற்று ஆட்டம் கண்டது.

ஆனால், டிவில்லியர்ஸ் அதிரடியாக 13 பந்துகளில் 28 ரன்கள் விளாசி பெங்களூருக்கு நம்பிக்கையை விதைத்தார். புதுமுகமான இந்தியாவின் கரியப்பா வீசிய சிறப்பான ஸ்பின்னில் டி வில்லியர்ஸ் ஸ்டம்பிங் முறையில் அவுட் ஆனார்.

கெய்ல் புயல்

கெய்ல் புயல்

ஆனால், அதன்பிறகுதான் கொல்கத்தா ஆட்டம் கண்டது. ஏனெனில், பொறுமையாக ஆடிக் கொண்டிருந்த கெய்ல், அதன்பிறகு பொங்க ஆரம்பித்தார். நரைன் உள்ளிட்ட எந்த பவுலரையும் விட்டு வைக்காத, கெய்ல், பவுண்டரி, சிக்சர் என விளாசி, கொல்கத்தா மைதானத்தை ரன் மழையில் நனைய வைத்தார்.

ஆட்டத்தில் திருப்பம்

ஆட்டத்தில் திருப்பம்

19வது ஓவரின் முதல் பந்தில் மோர்க்கல் பந்தை சிக்சருக்கு விளாசிய கெய்ல் 95 ரன்களை எட்டினார். அடுத்த பந்தையும் சிக்சருக்கு தூக்க, பவுண்டரி எல்லையில் நின்ற பாண்டே கேட்ச் பிடிக்க முயன்று முடியாததால், கீழே தட்டிவிட்டு எல்லைக் கோட்டுக்கு அப்பால் விழுந்தார். பிறகு அந்த பந்தை எறிந்தார். 2வது ரன்னுக்காக ஓடி வந்த கெய்ல் ரன் அவுட் செய்யப்பட்டார். முக்கியமான நேரத்தில் கெய்ல் 96 ரன்னில் வெளியேறியதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் ஹர்ஷல் பட்டேல் 9 ரன்கள், அபு நிச்சிம் 5 ரன்களுடன் நின்று, 19வது ஓவரின் கடைசி பந்தில் வெற்றி பெறச் செய்தனர். இதன்மூலம், கொல்கத்தா வெற்றி பயணம், தடுக்கப்பட்டது.

Story first published: Sunday, April 12, 2015, 15:41 [IST]
Other articles published on Apr 12, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+