
வெளிநாட்டு இறக்குமதி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மொத்தம் 25 வீரர்கள் உள்ளனர். அதில் 9 பேர் வெளிநாட்டு வீரர்களாகும்.

ரூ.70 லட்சம்தான் இருக்காம்
வீரர்களை வாங்குவதற்காக ஒவ்வொரு ஐபிஎல் அணியுமே அதிகபட்சமாக 60 கோடி ரூபாய் வரைதான் செலவிட முடியும் என்பது விதிமுறை. அந்த வகையில் சென்னை அணியிடம் தற்போது ரூ.70 லட்சம்தான் மிச்சமுள்ளது.

வருக.. வருக..
நேற்றைய ஏலத்தில் புதிதாக வாங்கப்பட்ட வீரர்கள்: மைக்கேல் ஹசி, இர்ஃபான் பதான், ராகுல் ஷர்மா, கைல் அப்பாட், ஆன்ட்ரூ டை, பிரதியூஸ் சிங், அன்குஷ் பைன்ஸ், ஏகலைவா திவேதி.

கழற்றிவிடப்பட்டவர்கள்
சிஎஸ்கே விடுவித்த வீரர்கள்: பென் ஹில்பென்ஹாஸ், ஜோன் ஹேஸ்டிங்ஸ், விஜய் சங்கர், டேவிட் ஹஸ்சி.

நாங்க எப்போதுமே விசில்போடுவோம்
தொடரும் வீரர்கள்: டோணி, பிரெண்டன் மெக்கல்லம், ட்வைன் பிராவோ, ஆஷிஷ் நெக்ரா, பாபா அபராஜித், ட்வைன் ஸ்மித், பாப் டு பிளெசிஸ், ஈஸ்வர் சந்திர பாண்டே, மேட் ஹென்ட்ரி, மிதுன் மன்காஸ், மோகித் ஷர்மா, பவான் நேகி, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா, சாமுவேல் பத்ரி, ரோனிட்.

நம்மூர்காரங்களாச்சே..
அடுத்த அணிக்கு போனதில் முக்கிய வீரர்கள்: ஒப்பனிங் பேட்ஸ்மேன் முரளி விஜய் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் பத்ரிநாத்.

ச்சும்மா அதிருதில்லே..
சிஎஸ்கே பேட்டிங் வரிசை: டோணி, சுரேஷ் ரெய்னா, மெக்கல்லம், பாப் டு பிளெசிஸ், ட்வைன் ஸ்மித், மைக் ஹஸ்சி, பாபா அப்ராஜித். அன்குஷ் பைன்ஸ், ஏகலைவா திவேதி. இதில் கடைசி இருவரும் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன்களாகும்.

நெக்ரா தலைமையில் பவுலிங் படை
பவுலிங் வரிசை: நெக்ரா, ஈஸ்வர் பாண்டே, மோகித் ஷர்மா, சாமுவேல் பத்ரி, ரோன்ட் மோரே, பவான் நேகி, மேட் ஹென்ட்ரி, ராகுல் ஷர்மா, பிரத்யூஸ் சிங், கைல் அப்பாட்.

ஆல்ரவுண்டர்கள் இருக்க அச்சம் எதற்கு
ஆல்ரவுண்டர்கள் வரிசை: ஜடேஜா, ட்வைன் பிராவோ, மிதுன் மன்காஸ், அஸ்வின், இர்பான் பதான், ஆன்ட்ரூ டை.


Click it and Unblock the Notifications