Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐ.பி.எல்.8: அதைப் போயி அங்க போட்டு… சை… கூச்சத்தில் நெளியும் பஞ்சாப் வீரர்கள்

மும்பை: ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்கும் பஞ்சாப் அணியின் வீரர்களின் உடையில் காண்டம் விளம்பரம் இடம்பெற்று உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது சில வீரர்களுக்கு கூச்சத்தையும், சிலருக்கு சிரிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. வீட்ல பார்த்த என்ன நினைப்பாங்களோ... என்று சில வீரர்கள் சங்கடத்தில் நெளியத் தொடங்கியுள்ளனராம்.

ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் அணிகளுக்கு பல நிறுவனங்கள் விளம்பரம் கொடுப்பது வாடிக்கை. அந்த நிறுவனங்களின் விளம்பரங்கள் அனைத்தும் வீரர்களின் உடையில் அச்சிடப்பட்டிருக்கும். இதன் மூலம் போட்டியை பார்க்கும் பல கோடி மக்களிடம் அந்த விளம்பரங்கள் சென்று சேரும் என்பது நம்பிக்கை.

காண்டம் விளம்பரம்

காண்டம் விளம்பரம்

டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் மேன்கைண்ட் பார்மா என்ற நிறுவனத்தின் மேன்போர்ஸ் காண்டம் பிராண்ட் பஞ்சாப் அணியின் உடையில் விளம்பரம் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.

பின் பக்கத்தில்தான்

பின் பக்கத்தில்தான்

இதன்படி மேன்போர்ஸ் காண்டத்தின் படம் அந்த அணி வீரர்களின் உடையின் பின்பகுதியில் இடம்பெறும். பெரும்பாலும் ஐ.பி.எல். போட்டியை இளைஞர்கள் தான் பார்க்கிறார்கள், எனவே அவர்களை குறிவைத்தே இந்த விளம்பரத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் அந்த அணிக்கும் பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்.

உடைகளில் விளம்பரம்

உடைகளில் விளம்பரம்

பஞ்சாப் அணியில் அஸ்கார் படேல், மன்னன் வோரா, மேக்ஸ்வெல், மில்லர் போன்ற பல இளம் வீரர்கள்களின் உடையில் இந்த விளம்பரம் இடம்பெற்றுள்ளது.

எப்படி சமாளிப்பது?

எப்படி சமாளிப்பது?

இந்த விளம்பரம் பற்றி கருத்து கூறியுள்ள பஞ்சாப் அணியின் பெயர் குறிப்பிட விரும்பாத வீரர் ஒருவர், "என்ன சொல்வது என்று தெரியவில்லை. என் குடும்பத்தினர் நான் விளையாடும் போட்டிகளை பார்க்கும்போது கொஞ்சம் கஷ்டமாக இருக்கப்போகிறது.

பார்க்கிற எங்களுக்கு?

பார்க்கிற எங்களுக்கு?

முக்கியமாக என் நண்பர்களின் கிண்டலை எப்படி சமாளிப்பது என்றுதான் தெரியவில்லை என்று கூறியுள்ளார். அந்த டிரஸ் போடுற உங்களுக்கே இப்படின்னா அதை பார்க்கிற எங்களுக்கு எப்படி இருக்குமோ தெரியலையே?.

Story first published: Thursday, April 9, 2015, 17:37 [IST]
Other articles published on Apr 9, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+