For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டோணி வர்றார் கொஞ்சம் தள்ளி நில்லுங்கோ.. இனி ஐ.பி.எல் மேட்ச்சும் தமிழில்!

By Mayura Akilan

சென்னை: எந்த விசயத்தையும் தெரிந்த மொழியில் படித்தாலோ கேட்டாலே அது தனி சுகம்தான். கிரிக்கெட் மேட்ச் என்றால் கூடுதல் சுகம் என்று அகம் மகிழ்கிறார்கள் தமிழக ரசிகர்கள். உலகக் கோப்பை போட்டிகளை அடுத்து கலர்ஃபுல் மேட்சான ஐ.பி.எல் 8 போட்டிகளும் இனி தமிழக ரசிகர்களின் காதுகளில் இனிக்க இனிக்க தேனாகப் பாயப் போகிறது.

கடந்த சில வாரங்களாகவே உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் முதன் முறையாக விஜய் தொலைக்காட்சியில் தமிழில் ஒளிபரப்பானது. இது மிகுந்த வரவேற்பை பெற்றது. விஜய் தொலைக்காட்சியின் டிஆர்பி ரேட்டிங்கையும் எகிற வைத்தது.

தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில் இந்த போட்டிகளும் தமிழ் வர்ணணையோடு நேற்று முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

சோனி கிக்ஸ்

சோனி கிக்ஸ்

சோனி குரூப்பிலிருந்து வரும் சோனி கிக்ஸ் தொலைக்காட்சிதான் ஒளிபரப்புகிறது. தமிழ் தவிர ஆங்கிலம், பெங்காலி, தெலுங்கு மொழிகளிலும் ஒளிபரப்புகிறது. இதனை ஐபிஎல் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமம் பெற்றுள்ள மல்டி ஸ்கிரீன் மீடியா நிறுவனம் அறிவித்துள்ளது.

கோடிக்கணக்கில் வருமானம்

கோடிக்கணக்கில் வருமானம்

இந்த நிறுவனம் கடந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டி ஒளிபரப்பின் மூலம் 800 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியது. இந்த ஆண்டு போட்டிகளின் மூலம் 950 கோடி வருமானம் ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது 10 விளம்பரதாரர்கள் உள்ளனர். வருகிற போட்டியின் மூலம் மேலும் 3 விளம்பரதாரர்கள் இணைகிறார்கள். விளம்பர கட்டணத்தையும் 15 சதவிகிதம் உயர்த்தி உள்ளனர். 10 விநாடி விளம்பர கட்டணம் 5 லட்சம் ரூபாயாம்.

தமிழில் வர்ணனை

தமிழில் வர்ணனை

கிரிக்கெட் பற்றிய புரிதல் வந்த போது 1980 களில் ரேடியோவில் கிரிகெட் கமெண்ட்ரிகளை கட்டும் பாக்கெட் சைஸ் ரேடியோவில் கேட்கும் கமென்ட்ரிகள் இன்றைக்கும் மறக்கமுடியாதவை. சன் டிவி ஒரு முயற்சி எடுத்தது .. அது சரியாக வரவில்லை. ரசிகர்களின் மனதை ஈர்க்கவில்லை என்றே கூறலாம்.

விஜய் டிவியில் வர்ணனை

விஜய் டிவியில் வர்ணனை

அதேசமயம் உலக கோப்பை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பை தமிழ் வர்ணனையுடன் விஜய் டிவி ஒளிபரப்பியது கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்ல அணைத்து பாமர தமிழர்களையும் கிரிக்கெட் பக்கம் கவனத்தை திருப்பியது.

கலக்கல் வர்ணனை

கலக்கல் வர்ணனை

வர்ணனையாளர்களாக இந்திய அணியில் இடம் பெற்ற தமிழர்கள் சடகோபன் ரமேஷ் ஹேமந்த் பதானி மற்றும் ஜானி ஆகியோரின் வர்ணனை பற்றி சின்ன சின்ன விமர்சனங்கள் இருந்தாலும் பெரும்பாலோனரை கவர்ந்தது. அடிக்கடி ரஜினி டயலாக் வடிவேல் டயலாக் மட்டுமல்ல தொழில் நுட்ப விளக்கங்கள் .ஒரு அணி தலைவர் எப்படி செயல பட திட்டமிடுவாரோ அத்தனையும் விளாசினார்கள். இந்த தமிழ் வர்ணனனை கேபிள் டிவி வரலாற்றில் ஒரு மயில் கல்லாக அமைந்தது.

ஐ.பி.எல். மேட்ச் தமிழில்

ஐ.பி.எல். மேட்ச் தமிழில்

தமிழக கிரிக்கெட் ரசிகர்களை குறிவைத்துள்ள சோனி டிவியும் தற்போது சோனி கிக்ஸ் என்ற சேனலை ஐ.பி.எல் போட்டிக்காக களம் இறக்கியுள்ளது. இதில் தமிழ், தெலுங்கு, வங்காளம், இந்தி மொழிகளில் அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப வர்ணணை செய்யப்படுகிறது.

தமிழில் எப்படி?

தமிழில் எப்படி?

ஐ.பி.எல் மேட்ச் என்றாலே பெரிதாக ஒருவித எதிர்பார்ப்பு இருக்கும். தமிழ் வர்ணனை ஒருவித எதிர்பார்ப்பினை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. இன்றைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டேர் டெவில்ஸ் அணியும் சென்னையில் மோதப்போகிறது. தமிழ் நேரடி வர்ணனை தமிழக ரசிகர்களுக்கு தனி விருந்தாக அமையப்போகிறது. " டோணி வர்றார் கொஞ்சம் தள்ளி நில்லுங்கோ என்று வர்ணனையாளர்கள் சொன்னாலும் ஆச்சரியமில்லை".

வர்ணனை மட்டுமே தமிழில்

வர்ணனை மட்டுமே தமிழில்

வர்ணனை தமிழில் இருந்தாலும் மேட்சுக்கு முன்பும் பின்பும் வழங்கப்படும் நிபுணர்களின் பேட்டிகள், அலசல்கள் எல்லாம் வழக்கம்போல ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது என்று அங்கலாய்க்கிறார்கள் தமிழக ரசிகர்கள்.

ஏம்பா அதையும் கொஞ்சம் தமிழ் படுத்துங்களேன்...

Story first published: Thursday, April 9, 2015, 11:53 [IST]
Other articles published on Apr 9, 2015
English summary
SONY TV launched Sony Kix, its second foray in sports telecast after Sony Six, which will broadcast Telugu and Tamil sports feed
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+