சென்னை: "பேமிலி சாங்" என்றாலே உடனே நினைவுக்கு வருவது நாளை நமதே படப் பாடல்தான். பேமிலி சாங் என்ற கான்செப்ட்டே அந்தப் படத்தின் பாடலுக்குப் பிறகுதான் ரொம்பப் பிரலபமானது.
அந்தப் படத்தையும், பாடலையும் வைத்து நிறையவே கிண்டலடித்து ஓய்ந்து விட்டது தமிழ் கூறும் நல்லுலகம்.

இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு பேமிலி சாங்கை உருவாக்கியுள்ளனர்.
இது ஐபிஎல் சீசன்.. மஞ்சாக் கலர் சட்டையுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் டிவி பெட்டிகளை மொய்த்தபடி உள்ளனர். இந்த நேரத்தில் இந்தப் பாடல் அவர்களுக்கு புது உத்வேகம் அளிக்கக் கூடியதாக இருக்கும்.

இந்தப் பாடலை கேப்டன் டோணி தலைமையில் மொத்த அணியினரும் கூடி நின்றுப் பாடியுள்ளனர். ரசிகர்களுக்கு உத்வேகம் அளிக்கக் கூடிய இந்தப் பாடல், உண்மையில் வீரர்களுக்கே செம உற்சாகத்தைக் கொடுத்திருக்கும் என்று நம்பலாம்.

காரணம், அமைதி, அடக்கத்திற்குப் பெயர் போன கேப்டன் டோணியே இந்தப் பாட்டை உச்சஸ்தாயியில் உற்சாகத்துடன் குலுங்கிக் குலுங்கிப் பாடியுள்ளதைப் பார்த்தாலே அது தெரிகிறது.
நீங்களும் பாருங்க, பாடுங்க.. மறக்காம விசில் போடுங்க!