For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐ.பி.எல். 2015: கொல்கத்தாவிடம் அடிவாங்கிய ஆக்ரோஷத்தில் ஹைதராபாத்தை நாளை பந்தாடுமா சென்னை?

By Mathi

ஹைதராபாத்: நடப்பு ஐ.பி.எல். 8வது தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 9-வது ஆட்டத்தில் நாளை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் ஹைதராபாத்தில் இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

8வது ஐ.பி.எல். போட்டிகளில் டோணி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணி அணி இதுவரை 8 ஆட்டங்களில் 6 வெற்றிகள், 2 தோல்விகள் என 12 புள்ளிகளுடன் இருக்கிறது.

வெற்றிக்கான நெருக்கடி

வெற்றிக்கான நெருக்கடி

சென்னை அணியில் ஸ்மித், மேக்குல்லம், ரெய்னா, டுபிளிசிஸ், பிராவே, ஜடேஜா, ஆசிஷ் நெக்ரா என வரிந்துகட்டும் வீரர்கள் உள்ளனர்.

கொல்கத்தாவிடம் நேற்றைய போட்டியில் தோற்றதால் நாளை வெற்றியைப் பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது சென்னை அணி.

3 வெற்றி 4 தோல்வி

3 வெற்றி 4 தோல்வி

டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 7 ஆட்டத்தில் 3 வெற்றி, 4 தோல்வி பெற்று இருக்கிறது.

சென்னையிடம் தோற்றது..

சென்னையிடம் தோற்றது..

இந்த அணியில் ஷிகர் தவான், ஸ்டெயின், பெளல்ட், புவனேஸ்வர்குமார், ரவி போரா போன்ற வீரர்கள் உள்ளனர். ஹைதராபாத் அணி கடந்த லீக் ஆட்டத்தில் சென்னையிடம் 45 ரன் வித்தியாசத்தில் தோற்றது.

என்ன நடக்கும்?

என்ன நடக்கும்?

நாளைய போட்டியில் அடுத்தடுத்து தோல்வி என்ற விமர்சனத்துக்கு சென்னை முற்றுப் புள்ளி வைக்குமா? தம்மை வீழ்த்திய சென்னையை சொந்த மண்ணில் வைத்து ஹைதராபாத் பதம் பார்க்குமா?

Story first published: Friday, May 1, 2015, 12:04 [IST]
Other articles published on May 1, 2015
English summary
CSK and SRH battle it out in the IPL 8 contest in Hyderabad on Saturday.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+