விசாகப்பட்டனத்தில் 'ரைஸ்' ஆகுமா 'சன்'?.... ராஜஸ்தானுடன் ஹைதராபாத் இன்று "அடிதடி"!
விசாகப்பட்டனம்: ஐபிஎல் தொடரில் இன்று தோல்வியே காணாத ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை, தனது கோட்டையில் சந்திக்கவுள்ளது ஒரு தோல்வி, ஒரு வெற்றியுடன் வலம் வரும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
புள்ளிகள் வரிசையில் ராஜஸ்தான் அணி முதலிடத்தில் உள்ளது. ஹைதராபாத் அணியோ 6வது இடத்தில் உட்கார்ந்திருக்கிறது.
இதுவரை ஹோம் அவே போட்டிகளில் ஆடி வந்த ஹைதராபாத் தற்போது தனது உள்ளூர் ஆட்டங்களுக்கு மாறியுள்ளது. முதல் இரு போட்டிகளில் ஒன்றில் வெற்றியும், இன்னொன்றில் தோல்வியும் தழுவியுள்ளது ஹைதராபாத். மறுபக்கம் ராஜஸ்தான் அணி 3 போட்டிகளில் ஆடி மூன்றிலும் வென்றுள்ளது.

ரெண்டு பேருக்கும் ஆஸ்திரேலிய கேப்டன்
ஹைதராபாத் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் இருக்கிறார். ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஆஸ்திரேலியாவின் ஷான் வாட்சன். தற்காலிக கேப்டனாக பணியாற்றிய ஸ்டீவன் ஸ்மித்தும் கூட ஆஸ்திரேலியாதான்.

வெல்லுமா ஹைதராபாத்
ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரை இன்று வெற்றிக்கு முயலும். அந்த அணியில் டேவிட் வார்னர், ஷிகர் தவான், டிரென்ட் போல்ட் ஆகியோர் முக்கியமானவர்கள்.

முட்டுக்கட்டை போடுமா ராஜஸ்தான்
மறுபக்கம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4வது வெற்றியைப் பறிக்க முயற்சிக்கும். அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித், ஜேம்ஸ் பால்க்னர், கிறிஸ் மோரிஸ் கவனிப்புக்குரியவர்கள் ஆவர்.

ராஜஸ்தான் ஆதிக்கம்
இரு அணிகளும் இதுவரை 5 முறை மோதியுள்ளன. அதில் 3 முறை ராஜஸ்தான் வென்றுள்ளது. 2 முறை ஹைதராபாத் வென்றுள்ளது.

உனக்கு 2.. எனக்கு 6
நடப்புத் தொடரில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ். ஹைதராபாத் அணி 2 புள்ளிகளுடன் மட்டுமே இருக்கிறது.

ராஜஸ்தான் டீம்
ராஜஸ்தான் அணி விவரம் - ஷான் வாட்சன், அபிஷேக் நாயர், அஜிங்கியா ரஹானே, அன்கித் நாகேந்திர சர்மா, பென் கட்டிங், தீபக் ஹூடா, தவல் குல்கர்னி, திஷாந்த் யாக்னிக், ஜேம்ஸ் பால்க்னர், கனே ரிச்சர்ட்சன், கருண் நாயர், பிரவீன் தாம்பே, ராகுல் தெவேடியா, ரஜத் பாட்டியா, சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித், ஸ்டூவர்ட் பின்னி, டிம் செளதி, விக்ரம்ஜித் மாலிக், கிறிஸ் மாரிஸ், ஜுவான் தெரான், பரீந்தர் சிங் சரண், திணேஷ் சலுங்கே, சாகர் திரிவேதி, பர்தீப் சாஹு.

சன் ரைசர்ஸ்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: டேவிட் வார்னர், ஷிகர் தவான், ஆசிக் ரெட்டி, புவனேஸ்வர் குமார், சமா மிலிந்த், டேன்ல் ஸ்டெயின், இஷாந்த் சர்மா, கரண் சர்மா, கே.எல்.ராகுல், மோய்சஸ் ஹென்ரிக்ஸ், நமன் ஓஜா, பர்வேஸ் ரசூல், ரிக்கி பூயி, டிரென்ட் போல்ட், பிரவீன் குமார், கெவின் பீட்டர்சன், இயான் மோர்கன், ரவி போபரா, கனே வில்லியம்சன், எல்.ஆர். சுக்லா, பிரசாந்த் பத்மநாபன், ஹனுமா விகாரி, சித்தார்த் கெளல்.

தமிழிலும்
இந்தப் போட்டியை சோனி மேக்ஸ், சிக்ஸ், ஆத், கிக்ஸ் ஆகிய சானல்களில் பார்க்கலாம். இதில் கிக்ஸ் சேனலில் தமிழ் மற்றும் தெலுங்கில் வர்ணனையைக் கேட்கலாம்.


Click it and Unblock the Notifications