2014 பைனல் தோல்விக்கு இன்று பதிலடி கொடுக்குமா பஞ்சாப்? கொல்கத்தாவுடன் மோதல்
புனே: கடந்த ஆண்டு ஐபிஎல் பைனலில் அதிர்ச்சி தோல்வியளித்த கொல்கத்தா நைட் ரைடர்சுக்கு, நடப்பு ஐபிஎல்லில் இன்று பதிலடி கொடுக்குமா பஞ்சாப் அணி என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த சீசன் ஐபிஎல் தொடரில் இறுதி போட்டியில் மோதியவை கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள். 200 ரன் என்ற வெற்றி இலக்கை எட்டி கொல்கத்தா, பஞ்சாப்புக்கு கடைசி ஓவரில் அதிர்ச்சி தோல்வியை பரிசாக கொடுத்து சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில், இவ்விரு அணிகளும் இன்று முதல் முறையாக மோதுகின்றன. புனே மைதானத்தில் போட்டி நடக்கிறது. இதுகுறித்த ஒரு பார்வை.

எங்கே எப்போது?
புனே, எம்சிஏ சர்வதேச ஸ்டேடியம். நாள்: ஏப்ரல் 18, சனிக்கிழமை. நேரம்: இரவு 8 மணி.

இந்தியாவில் எப்படி பார்க்கலாம்?
சோனி சிக்ஸ்-ஆங்கிலத்திலும், சோனி மேக்ஸ்-இந்தியிலும், சோனி ஆத்-வங்காளத்திலும், சோனி கிக்ஸ்-தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் நேரடி ஒளிபரப்பும்.

முக்கிய வீரர்கள்:
பஞ்சாப் அணி-வீரேந்திர சேவாக், கிளென் மேக்ஸ்வெல், மிட்சேல் ஜான்சன். கொல்கத்தா அணி-கம்பீர், ராபின் உத்தப்பா, சுனில் நரைன்.

நேருக்கு நேர்
பஞ்சாப் 9 முறையும், கொல்கத்தா 6 முறையும் வென்றுள்ளன. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இறுதி போட்டியில் பஞ்சாப்பை, கொல்கத்தா வீழ்த்தியது.

புள்ளி பட்டியலில் தற்போதைய நிலை
கொல்கத்தா, 1 வெற்றி, 1 தோல்வியுடன், 3வது இடம் பிடித்துள்ளது. பஞ்சாப் அணி, 1 வெற்றி, 2 தோல்விகளுடன் 5வது இடத்திலுள்ளது.


Click it and Unblock the Notifications