Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டோணி vs கோஹ்லி.. யாருடைய கேப்டன்ஷிப் பெஸ்ட்? சென்னை-பெங்களூர் இன்று பலப்பரிட்சை!

பெங்களூரு: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்சும் பலப் பரிட்சை நடத்த உள்ளன.

ஆஸ்திரேலிய முன்னணி பந்து வீச்சாளரும், உலக கோப்பை தொடர் நாயகனுமான மிட்சேல் ஸ்டார்க், பெங்களூர் அணிக்கு திரும்பியுள்ளதால் அந்த அணி உற்சாகமாக உள்ளது.

கெய்ல், டி வில்லியர்ஸ், கோஹ்லி என பேட்டிங் ஜாம்பவான்களால் நிரம்பிய பெங்களூரு அணிக்கு, பவுலிங் பிரச்சினையாக இருந்து வந்தது. அந்த குறையை தீர்க்க ஸ்டார்க் உதவுவார் என்ற உற்சாகம் மல்லையா அணியில் பீறிட்டு அடிக்கிறது. முட்டி வலியால் அவதிப்பட்ட ஸ்டார்க், குணமடைந்து இன்று சென்னைக்கு எதிராக களமிறங்குகிறாராம்.

இது பனங்காட்டு நரி

இது பனங்காட்டு நரி

ஆனால், வலுவான பேட்டிங் வரிசையை கொண்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், இந்த பூச்சாண்டிக்கெல்லாம் அஞ்சுவதாக தெரியவில்லை. வழக்கம்போல பட்டையை கிளப்ப பிரெண்டன் மெக்கல்லமும், ஸ்மித்தும், ரெய்னா, டோணி, பிராவோ ஆகியோரும் பேட்டுடன் தயாராக உள்ளனர். ஆஷிஷ் நெஹ்ராவின் அபார பந்து வீச்சும், அஸ்வினின் சுழலும், கெய்ல் புயலை கட்டுப்படுத்தும் என நம்பலாம்.

டோணியா, கோஹ்லியா

டோணியா, கோஹ்லியா

இன்றைய போட்டி பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. இரு அணிகளிலுமே, தனிப்பட்ட முறையில் மிகவும் திறமையான வீரர்கள் உள்ளனர்.

கெய்லா அல்லது நெஹ்ராவா, மெக்கல்லம், ஸ்மித்தா அல்லது மிட்சேல் ஸ்டார்க்கா, டோணியா, டிவில்லியர்சா என இரு தரப்பிலும் உள்ள ஜாம்பவான்கள் மீதுதான் அனைவர் கண்களும் உள்ளன. இதைவிட ஒருபடி மேல் போய், இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணி கேப்டன் டோணியா அல்லது டெஸ்ட் கேப்டன் கோஹ்லியா என்றும் ரசிகர்கள் கோஷமிட்டு வருகின்றனர்.

எங்கு, எப்போது?

எங்கு, எப்போது?

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இரவு, 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

எப்படி பார்க்கலாம்?

எப்படி பார்க்கலாம்?

சோனி கிக்ஸ் சேனலில் தமிழ் மற்றும் தெலுங்கிலும், சோனி ஆத் சேனலில் வங்காளத்திலும், சோனி மேக்ஸ் சேனலில் ஹிந்தியிலும், சோனி சிக்ஸ் சேனலில் ஆங்கிலத்திலும் வர்ணனையுடன் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

வாட்ச் பண்ண வேண்டியவர்கள்

வாட்ச் பண்ண வேண்டியவர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ்-பிரெண்டன் மெக்கல்லம், ட்வைன் ஸ்மித், சுரேஷ் ரெய்னா, டோணி, ஸ்வைன் பிராவோ, ஆஷிஷ் நெஹ்ரா.

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்- கெய்ல், விராட் கோஹ்லி, டி வில்லியர்ஸ், மிட்சேல் ஸ்டார்க்.

நேருக்கு நேர்

நேருக்கு நேர்

சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் இதுவரை மோதிய ஐபிஎல் ஆட்டங்களில் சென்னை 9 போட்டிகளிலும், பெங்களூர் 7 ஆட்டங்களிலும் ஜெயித்துள்ளன.

ரேங்க்

ரேங்க்

நடப்பு சீசனில் 3 வெற்றி ஒரு தோல்வியுடன், சென்னை 2வது ரேங்கில் உள்ளது. பெங்களூரு, 2 தோல்வி, ஒரு வெற்றியுடன், 8வது இடத்தில் உள்ளது.

மற்றொரு போட்டி

மற்றொரு போட்டி

இன்று மாலை 4 மணிக்கு விசாகப்பட்டிணத்தில் தொடங்கும் போட்டியில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

Story first published: Wednesday, April 22, 2015, 13:54 [IST]
Other articles published on Apr 22, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+