டுமினி டீமை "டமால் டுமால்" என அடித்து நொறுக்குவாரா "பிளாஸ்டர்" பொலார்ட்...?
டெல்லி: ஐபிஎல் லீக் ஆட்டத்தில் இன்று டெல்லி டேர்டெவில்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப் பரிட்சை நடத்த உள்ளன.
டெல்லி அணி தனது சொந்த ஊரில் கடந்த 9 போட்டிகளிலும் தோற்றுள்ளது. ஒட்டுமொத்தமாகவும், 26 போட்டிகளை தோற்று 14ல் மட்டுமே வென்றுள்ளது. இன்றைய போட்டியின்போது தனது சொந்த மண்ணில் அந்த அணி சாதிக்கும் முனைப்பில் உள்ளது.
அதேநேரம், தொடர் தோல்விகளால் துவண்டிருந்த மும்பை இந்தியன்ஸ், கடந்த போட்டியில் பெங்களூருவுக்கு எதிராக கிடைத்த வெற்றியால் தலை நிமிர்ந்துள்ளது.

எங்கே, எப்போது?
டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில், ஏப்ரல் 23ம் தேதி, இரவு 8 மணிக்கு போட்டி நடக்கிறது.

இந்தியாவில் எதில் பார்க்கலாம்?
சோனி கிக்ஸ் சேனலில், தமிழ், தெலுங்கு, சோனி ஆத் சேனலில் வங்காளம், சோனி சிக்ஸ் சேனலில் ஆங்கிலம், சோனி மேக்ஸ் சேனலில் ஹிந்தியிலும் கமெண்டரியுடன், நேரடி ஒளிபரப்பை காணலாம்.

முக்கிய வீரர்கள்
டெல்லி டேர்டெவில்ஸ்-ஜேபி டுமினி, ஷ்ரேயாஸ் ஐயர், யுவராஜ் சிங், இம்ரான் தாஹீர்.
மும்பை இந்தியன்ஸ்-ரோகித் ஷர்மா, கெய்ரன் பொல்லார்ட், ஹர்பஜன் சிங், லதீஷ் மலிங்கா
மும்பை இந்தியன்ஸ் ஆல்-ரவவுண்டர் கோரி ஆன்டர்சன் காயத்தால் வெளியேறிவிட்டார். பொல்லார்ட் இன்றும் வாயில் பிளாஸ்டர் ஒட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

நேருக்கு நேர்
மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி அணிகள் இதுவரை தலா 7 போட்டிகளில் வென்று சரிசம பலமுள்ள அணிகளாக விளங்குகின்றன.
தற்போதைய நிலையில், 2 வெற்றி, 3 தோல்விகளுடன் டெல்லி 5வது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் 1 வெற்றி, 4 தோல்விகளுடன் 7வது இடத்திலும் உள்ளன.


Click it and Unblock the Notifications