Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"மச்சி ஓபன் தி Battle".... ஈடனில் கொல்கத்தாவை சந்திக்கும் சென்னை.. "ஷாக்" தருமா கம்பீர் படை?

கொல்கத்தா: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 2வது ரவுண்டு ஐபிஎல் போட்டிகளை இன்று தொடங்குிறது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுடன் மோதுகிறது.

கடைசியாக இரு அணிகளும் மோதியபோது முதலில் பேட் செய்த சென்னை மிகவும் குறைந்த ஸ்கோரை எட்டியபோதும், பின்னர் சிறப்பான பீல்டிங் மற்றும் பவுலிங்கால் கொல்க்ததாவை நிலை குலைய வைத்து விட்டது.

இந்த நிலையில் 2வது சுற்றுப் போட்டியில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரு அணிகளும் மோதவுள்ளன. சென்னையை கொல்கத்தாவில் வைத்து அந்த அணி பழிவாங்க முயற்சிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதலிடத்தில் சென்னை

முதலிடத்தில் சென்னை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 வெற்றிகள், ஒரு தோல்வியுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. கொல்கத்தா 3 வெற்றிகளுடன் 4வது இடத்தில் நீடிக்கிறது.

2 நாட்கள் இடைவெளியில்

2 நாட்கள் இடைவெளியில்

2 நாட்கள் இடைவெளியில் இரு அணிகளும் 2வது முறையாக சந்திக்கின்றன. முதல் போட்டி சேப்பாக்கத்தில் நடந்தது. இன்றைய போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

பழி தீர்க்குமா கம்பீர் படை

பழி தீர்க்குமா கம்பீர் படை

சேப்பாகத்தில் கிடைத்த மயிரிழை தோல்வியால் அதிர்ச்சியான கொல்கத்தா இன்று ஈடன் கார்டன் மைதானத்தில் வைத்து சென்னையைப் பழி தீர்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிரடிப் படை சென்னை

அதிரடிப் படை சென்னை

சென்னை அணி தனது ஆடும் லெவனில் இதுவரை மாற்றமே செய்யாமல் முதல் 7 போட்டிகளையும் ஆடியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு போட்டியில் மட்டுமே அது தோற்றுள்ளது.

நிறுத்திப் பாரு பார்ப்போம்

நிறுத்திப் பாரு பார்ப்போம்

சென்னையின் வெற்றி வேகத்தை தடுத்து நிறுத்துமா கொல்கத்தா என்பது சந்தேகம்தான். காரணம். என்ன மாதிரியான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை சென்னை அழகாக சமாளித்து விடுகிறது.

கொல்கத்தாவின் கஷ்டம்

கொல்கத்தாவின் கஷ்டம்

கேப்டன் கம்பீர் சரியாக ஆட முடியாமல் தவிக்கிறார். யூசுப் பதான் சரியான சமயத்தில் கை கொடுக்கத் தவறி விடுகிறார். சுனில் நரீன் இல்லை. இருந்தாலும் ஆப் ஸ்பின் போட முடியாது. ராபின் உத்தப்பா மட்டுமே ஸ்டெடியாக ஆடுகிறார்.

முக்கிய வீரர்கள்

முக்கிய வீரர்கள்

கொல்கத்தாவுக்கு ராபின் உத்தப்பா, ரஸ்ஸல், உமேஷ் யாதவ், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் உள்ளனர். சென்னைக்கு மெக்கல்லம், ஸ்மித், பிராவோ, ரெய்னா, டோணி, ஆசிஷ் நெஹ்ரா என நிறையப் பேர் உள்ளனர்.

Story first published: Thursday, April 30, 2015, 14:16 [IST]
Other articles published on Apr 30, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+