Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'ஒரே புள்ளி' மும்பை-டெல்லி அணிகள் இன்று மோதல்! புள்ளிக்கு அந்தப்பக்கம் போகப்போறது யாரு?

மும்பை: அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டிருந்த மும்பை இந்தியன்ஸ் கடைசியாக ஆடிய மூன்று போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று தனது தன்னம்பிக்கையை மீட்டுள்ளது.

டெல்லி அணியை பொறுத்தளவில் 9 போட்டிகளில் ஆடி 8 புள்ளிகளை பெற்று பட்டியலில் 5வது இடத்திலும், மும்பை அணி அதேபோன்ற புள்ளிகளை பெற்று 7வது இடத்திலும் உள்ளது. ரன்ரேட் விகிதத்தின் அடிப்படையில் டெல்லி முன்னிலையில் உள்ளது.

சமீபத்திய போட்டிகளில் மும்பை அணி ஆடிய விதத்தை வைத்து பார்க்கும்போது, இன்றைய போட்டியில் அவர்கள்தான் ஃபேவரைட் என்று தெரிகிறது. மும்பையில் போட்டி நடப்பதால் உள்ளூர் சப்போர்ட்டும் அந்த அணிக்கு பலம்.

எங்கே எப்போது?

எங்கே எப்போது?

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் செவ்வாய்க்கிழமையான இன்று இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது. மும்பை இந்தியன்ஸ்-டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் பலப் பரிட்சை நடத்துகின்றன.

இந்தியாவில் எந்த சேனல்கள்?

இந்தியாவில் எந்த சேனல்கள்?

சோனி கிக்ஸ் சேனலில் தமிழ் மற்றும் தெலுங்கிலும், சோனி ஆத் சேனலில் வங்க மொழியிலும், சோனி மேக்ஸ் சேனலில் ஹிந்தியிலும், சோனி சிக்ஸ் சேனலில் ஆங்கிலத்திலும் கிரிக்கெட் நேரடி வர்ணனையை கேட்கலாம்.

முக்கிய வீரர்கள்

முக்கிய வீரர்கள்

மும்பை இந்தியன்ஸ்-லென்ட்ல் சிம்மன்ஸ், ரோகித் ஷர்மா, கெய்ரன் பொல்லார்ட், மலிங்கா.

டெல்லி அணி-ஜேபி டுமினி, ஷ்ரேயாஸ் ஐயர், இம்ரான் தாகீர்.

நேருக்கு நேர்

நேருக்கு நேர்

டெல்லியும், மும்பையும் இதுவரை மோதிய போட்டிகளில் டெல்லி 8 வெற்றிகளை சுவைத்துள்ளது. மும்பை, 7 முறை வெற்றி பெற்றுள்ளது.

புள்ளி பட்டியல்

புள்ளி பட்டியல்

நடப்பு ஐபிஎல் சீசனில் 4 வெற்றிகள், 5 தோல்விகளுடன் டெல்லி அணி 5வது இடத்திலும், அதேபோன்ற வெறறி தோல்விகளுடன் மும்பை 7வது இடத்திலும் உள்ளன. இவை இரண்டுமே 8 புள்ளிகள் பெற்றுள்ளன. எனவே ஒரே புள்ளிகள் கொண்ட இரு அணிகள் இன்று மோதுவதால் ஆட்டத்தில் அனல்பறக்கும்.

Story first published: Tuesday, May 5, 2015, 12:01 [IST]
Other articles published on May 5, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+