Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாழ்வா, சாவா போட்டியில், கொல்கத்தாவை இன்று எதிர்கொள்கிறது டெல்லி டேர்டெவில்ஸ்

கொல்கத்தா: இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- டுமினி தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடப்பு சாம்பியனான கொல்கத்தா 5 வெற்றி, 4 தோல்வியுடன் 11 புள்ளிகள் (ஒரு ஆட்டம் முடிவு இல்லை) பெற்று இருக்கிறது. 6வது வெற்றியை பெற்று பிளே ஆப் நோக்கி முன்னேறும் முனைப்பில் கொல்கத்தா அணி உள்ளது.

IPL 2015 Daily Guide: Match 42 - Kolkata Knight Riders Vs Delhi Daredevils

ஆனால், டெல்லி டேர்டெவில்ஸ் அணியை பொறுத்தளவில், இது, வாழ்வா? சாவா? போராட்டமாகும். வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் அந்த அணி உள்ளது. 4 வெற்றி, 6 தோல்வியுடன் அந்த அணி 8 புள்ளிகள் பெற்றுள்ளது. 'பிளேஆப்' வாய்ப்பில் இருக்க டெல்லி அணி கொல்கத்தாவை வீழ்த்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

கடந்த போட்டியில், காஸ்ட்லி வீரர் யுவராஜ்சிங் அரை சதம் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றது அந்த அணியின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. ஆனால் சொந்த களம் என்பதால் கொல்கத்தாவுக்கு சாதகம் அதிகமாகும்.

Story first published: Thursday, May 7, 2015, 17:30 [IST]
Other articles published on May 7, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+