Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்று இரு ஐபிஎல் போட்டிகள்! கொல்கத்தா vs பஞ்சாப், ஹைதராபாத் vs டெல்லி!

கொல்கத்தா: ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று இரு போட்டிகள் நடைபெறுகின்றன.

கொல்கத்தாவில் இன்று நடைபெறும் ஐபிஎல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸும், கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் மோதுகின்றன. மாலை 4 மணிக்கு இப்போட்டி கொல்கத்தா மைதானத்தில் தொடங்குகிறது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும்பட்சத்தில் கொல்கத்தா அணி 15 புள்ளிகளோடு புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறும் வாய்ப்புள்ளது. உள்ளூர் மைதானத்தில் தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்தி வரும் கொல்கத்தா அணிக்கு இன்றைய ஆட்டம் அங்கு ஆடும் கடைசி லீக் ஆட்டம் என்பதால் உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைக்க முயற்சிக்கும்.

பஞ்சரான பஞ்சாப்

பஞ்சரான பஞ்சாப்

அதேநேரம், பெங்களூருக்கு எதிராக 138 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி கண்ட பஞ்சாப் அணி, கொல்கத்தாவை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி 8ல் தோல்வி கண்டு கடைசி இடத்தில் இருக்கும் பஞ்சாப், பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பையும் இழந்துவிட்டது.

கொல்கத்தா பலம்

கொல்கத்தா பலம்

உள்ளூர் மைதானத்தில் இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள கொல்கத்தா ஒன்றில் மட்டுமே தோல்வி கண்டுள்ளது. பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே கொல்கத்தா அணி வலுவாக உள்ளது. கேப்டன் கம்பீர், ராபின் உத்தப்பா, மணீஷ் பாண்டே, ஆன்ட்ரே ரஸல், யூசுப் பதான், சூர்ய குமார் யாதவ் போன்ற வலுவான பேட்ஸ்மேன்கள் கொல்கத்தாவுக்கு பலம் சேர்க்கின்றனர். ஆன்ட்ரே ரஸல், ஜோகன் போத்தா ஆகியோர் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அசத்தி வருகின்றனர்.

பேட்டிங் சொதப்பலில் பஞ்சாப்

பேட்டிங் சொதப்பலில் பஞ்சாப்

பஞ்சாப் அணியைப் பொறுத்த வரையில் பேட்டிங், பவுலிங் உள்ளிட்ட எல்லா துறைகளிலும் பெரும் தடுமாற்றத்தில் உள்ளது. அந்த அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் வீரர்களை மாற்றிப் பார்த்தும் பலன் கிடைக்கவில்லை. முரளி விஜய், மனன் வோரா, கேப்டன் பெய்லி, மேக்ஸ்வெல், மில்லர் என வலுவான பேட்ஸ் மேன்கள் இருந்தபோதிலும் இதுவரை யாரும் சரியாக விளையாடவில்லை.

டெல்லி-ஹைதராபாத் மோதல்

டெல்லி-ஹைதராபாத் மோதல்

ராய்ப்பூரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸும், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் தும் மோதுகின்றன. இதுவரை இவ்விரு அணிகளும் 5 முறை மோதியுள்ளன. அதில் சன்ரை ஸர்ஸ் 4 முறையும், டெல்லி ஒரு முறையும் வெற்றி கண்டுள்ளன.

தற்போதைய புள்ளி பட்டியலில் ஹைதராபாத் 6வது இடத்திலும், டெல்லி 7வது இடத்திலும் உள்ளன. ஹைதராபாத் 5 போட்டிகளில் வெற்றியும், ஐந்தில் தோல்வியும் கண்டுள்ளது. டெல்லி 4 வெற்றி, 7 தோல்விகளை கண்டுள்ளது.

Story first published: Saturday, May 9, 2015, 16:01 [IST]
Other articles published on May 9, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+