ஹைதராபாத்-பெங்களூர் இன்று மோதல்.. இரு அணிகளுக்குமே வாழ்வா சாவா போராட்டம்!
ஹைதராபாத்: வெற்றி பெற்றால்தான் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற கட்டாயத்திலுள்ள ஹைதராபாத் மற்றும் பெங்களூர் அணிகள் இன்று பலப் பரிட்சை நடத்த உள்ளன.
பிளேஆப் சுற்றுக்கு மொத்தம் 4 அணிகள் மட்டுமே தேர்வு பெற முடியும் என்ற நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்த சுற்றுக்குள் செல்வது உறுதியாகிவிட்டது.

கடும் போட்டி
எஞ்சிய மூன்று இடங்களுக்கு, பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ் ஆகிய ஐந்து அணிகள் போராடி வருகின்றன.

எங்கு, எப்போது?
இதில், ஹைதராபாத்தில் இன்று நடைபெறும் போட்டியில் பெங்களூர் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோத உள்ளன. இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

முக்கிய வீரர்கள்
ஹைதராபாத்- டேவிட் வார்னர், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், டிரென்ட் பவுல்ட்.
பெங்களூர்- கிறிஸ் கெய்ல், விராட் கோஹ்லி, டிவில்லியர்ஸ், மிட்சேல் ஸ்டார்க்.

நேருக்கு நேர்
இதுவரை ஐபிஎல் தொடர்களில், இவ்விரு அணிகளும் மோதிய ஆட்டங்களில், ஹைதராபாத் அணி 3 முறையும், பெங்களூர் அணி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. எனவே இரு அணிகளுக்கு நடுவேயான போட்டி சுவாரசியமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications