எழுச்சி பெற்ற டெல்லியும், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சும் இன்று மோதல்!
டெல்லி: தலா இரு வெற்றிகளை சுவைத்துள்ள டெல்லி டேர்டெவில்சும், கொல்கத்தா நைட் ரைடர்சும் இன்று மோதுகின்றன.
நடப்பு சாம்பியன் கொல்கத்தா, நைட் ரைடர்சும், டெல்லி டேர்டெவில்சும், ஐபிஎல் லீக் போட்டியில் இன்று மோதுகின்றன. முதல் இரு போட்டிகளிலும் தோற்ற டெல்லி, அடுத்த இரு போட்டிகளிலும் மீண்டு வந்துள்ளது. யுவராஜ்சிங், மாயங்க் அகர்வால், டுமினி, ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்த போட்டிகளில் அரை சதம் விளாசி ஜொலிக்கின்றனர். இம்ரான் தாஹீர் 9 விக்கெட்டுகள் வீசி அசத்தியுள்ளார்.
கொல்கத்தா இதுவரை 3 ஆட்டங்களில் 2ல் வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியின் ஆன்ட்ரே ரசல், 2 இன்னிங்சுகளில் பேட்டிங் செய்து 107 ரன்கள் குவித்து முக்கிய துருப்பு சீட்டாக உள்ளார். சூர்யகுமார் யாதவ் பேட்டிங் அருமை.

எங்கு, எப்போது?
டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில், இன்று இரவு 8 மணிக்கு இப்போட்டி நடைபெறுகிறது. சொந்த மண்ணில் ஆடுவது டெல்லிக்கு சாதகமான அம்சமாகும்.

நேருக்கு நேர்
கொல்கத்தா-டெல்லி அணிகள் இதுவரை மோதிய 13 ஆட்டங்களில், கொல்கத்தா 7ல் வெற்றி பெற்றுள்ளது. எனவே இரு அணிகளும், எப்போதும் சமபலத்துடன் மோதியவை என்பது தெரிகிறது.

முக்கிய வீரர்கள்
டெல்லி அணி-யுவராஜ்சிங், டுமினி, இம்ரான் தாஹீர். கொல்கத்தா அணி-சுனில் நரைன், ஆன்ட்ரே ரசல், கம்பீர்.

புள்ளி பட்டியல்
கொல்கத்தா, டெல்லி அணிகள் தலா 4 புள்ளிகள் பெற்றிருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில், கொல்கத்தா, 3வது இடத்திலும், டெல்லி 4வது இடத்திலும் உள்ளன.

நேரடி ஒளிபரப்பு
சோனி சிக்ஸ், சோனி மேக்ஸ், சோனி கிக்ஸ் ஆகிய சேனல்களில் முறையே, ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் கமெண்டரி கேட்கலாம்.


Click it and Unblock the Notifications