Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐ.பி.எல். 2015: டெல்லியை வீழ்த்தி பதிலடி கொடுக்குமா பஞ்சாப்?

டெல்லி: ஐ.பி.எல். போட்டியில் தம்மை தோற்கடித்த டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி பதிலடி கொடுக்கும் வகையில் இன்று விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு 8வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. டெல்லியில்மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி டேர் டெவில்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

IPL 2015: Delhi Daredevils seek to bounce back against Kings XI Punjab

டெல்லி 7 ஆட்டத்தில் 3 வெற்றி, 4 தோல்வியுடன் உள்ளது. அந்த அணியில் டுமினி, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரின் பேட்டிங் மட்டுமே சிறப்பாக இருக்கிறது.

யுவராஜ்சிங் இன்னும் அதிரடியை வெளிப்படுத்த வில்லை. இது பின்னடைவாக கருதப்படுகிறது. பந்து வீச்சில் இம்ரான் தாகீர் நல்ல நிலையில் உள்ளார். இன்றைய ஆட்டத்தில் ஜாகீர்கான் விளையாட வாய்ப்பு இருக்கிறது.

பஞ்சாப் அணி 7 ஆட்டத்தில் 2 வெற்றி மட்டுமே பெற்றது. 5 ஆட்டத்தில் தோற்றது. இதனால் இன்று வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

பஞ்சாப் அணியில் ஷேவாக், முரளிவிஜய், டேவிட் மில்லர், மேக்ஸ்வெல், ஜார்ஜ் பெய்லி போன்ற சிறந்த வீரர்கள் இருந்த போதிலும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

ஜார்ஜ் பெய்லி, ஷான் மார்ஷ் காயம் அடைந்து இருப்பதால் இன்று விளையாடுவது சந்தேகம். இது அந்த அணிக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

கடந்த போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸிடம் தோற்றதால் பஞ்சாப் அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கும்.

மும்பை- ராஜஸ்தான் மோதல்

மற்றொரு ஆட்டத்தில் இன்று இரவு 8 மணிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

4 லீக் போட்டிகளில் 2 தோல்வி, 2 முடிவு இல்லை என ராஜஸ்தானுக்கு சிறப்பாக அமையவில்லை. ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 7 ஆட்டத்தில் 2 வெற்றி மட்டுமே பெற்றது. 5 போட்டியில் தோற்றது. லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானிடம் தோற்றதற்கு பழி தீர்க்கும் வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி இன்று விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, May 1, 2015, 14:40 [IST]
Other articles published on May 1, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+