Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோஹ்லிக்கும், கம்பீருக்கும் மறுபடியும் "வாய்க்கால்" சண்டையாமே??

பெங்களூரு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராத் கோஹ்லிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் கெளதம் கம்பீருக்கும் இடையே மீண்டும் வாய்ச் சண்டை வெடித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

6வது ஐபிஎல் தொடரின்போது நடு மைதானத்தில் இருவரும் சண்டை போட்டு நாறிப் போன கதை அனைவருக்கும் தெரிந்ததுதான். 2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்த இருவருக்கும் இடையே சண்டை நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருவரும் ஒரே ஊர்க்காரர்கள். அதாவது டெல்லிக்காரர்கள். இருவருக்கும் ஆகாது. காரணம் யாருக்கும் சரியாகத் தெரியாது. 6வது ஐபிஎல்லில் இருவரும் போட்ட சண்டை கிட்டத்தட்ட அடிதடிக்குப் போய் விட்டது. கூடியிருந்த வீரர்கள்தான் சிரமப்பட்டு இருவரையும் பிரித்து விட்டனர்.

அதே கிரவுண்டு.. அதே சண்டை

அதே கிரவுண்டு.. அதே சண்டை

என்ன காமெடி என்றால் கடந்த முறை சண்டை போட்ட அதே பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில்தான் இந்தமுறையும் இருவரும் சண்டையில் ஈடுபட்டனராம்.

2 முறையும் வென்ற பெங்களூர்

2 முறையும் வென்ற பெங்களூர்

கடந்த முறை சண்டை வந்தபோது அந்தப் போட்டியில் பெங்களூர் ஜெயித்தது. இந்த முறையும் பெங்களூரே வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மழையால் பாதித்த போட்டி

மழையால் பாதித்த போட்டி

மே 2ம் தேதி சனிக்கிழமை நடந்த போட்டியின்போது பெங்களூர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மழையால் இந்தப் போட்டி கடுமையாக பாதிக்கப்பட்டு இரு அணிகளும் தலா 10 ஓவர் விளையாட முடிவு செய்யப்பட்டது.

திடீர் மோதல்

திடீர் மோதல்

முதலில் கொல்கத்தா பேட் செய்தது. பின்னர் விளையாடி பெங்களூர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டிக்குப் பின்னர் கோஹ்லிக்கும், கம்பீருக்கும் வாய்த் தகராறு வெடித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

2 முறை தோல்வி

2 முறை தோல்வி

நடப்புத் தொடரில் 2வது முறையாக கொல்கத்தாவை வீழ்த்தியுள்ளது பெங்களூர். கொல்கத்தாவில் நடந்த போட்டியிலும் பெங்களூர் அணியே 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடக்கத் தெரியாத கோஹ்லி

அடக்கத் தெரியாத கோஹ்லி

இந்த முறை மோதலுக்கு யார் காரணம் என்பது தெரியவில்லை. உணர்ச்சிகளையும், கோபத்தையும் அடக்கத் தெரியாதவர் கோஹ்லி. முனுக் முனுக்கென்று கோபம் வந்து விடும் அவருக்கு. இது உலகம் அறிந்த கதைதான்.

பட், அடிதடி வரை போகலை

பட், அடிதடி வரை போகலை

இந்த முறை போட்டி முடிந்ததும் இருவரும் மைதானத்தில் சிறிய வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் கடந்த முறை போல இந்த முறை பெரிய சண்டையாக இது மாறவில்லை.

அப்படி என்னதான் பிரச்சினை இவர்களுக்குள்....!?

Story first published: Monday, May 4, 2015, 13:17 [IST]
Other articles published on May 4, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+