நிலநடுக்க கவலையின்றி, தொடங்கியது மும்பை- ஹைதராபாத் ஐபிஎல் ஆட்டம்!
மும்பை: நிலநடுக்க பீதிக்கு நடுவேயும், ஐபிஎல் போட்டி மாற்றமின்றி நடந்து வருகிறது.
நேபாளத்தை மையம் கொண்டு தாக்கிய பயங்கல நிலநடுக்கத்தின் தாக்கம், இந்தியாவின் வட மாநிலங்கள் பலவற்றில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. மாலை 3.30 மணியளவில் இந்தியாவில் 17 பேர் நில நடுக்கத்தால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியிருந்தது.

ஆனால் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மாலை 4 மணிக்கு, ஹைதராபாத்-மும்பை அணிகளுக்கு நடுவேயான கிரிக்கெட் போட்டி தொடங்கியது. டாசில் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்து ஆடியது.
நிலநடுக்கத்தை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் பலரும் அனுபவித்து பீதியில் உள்ளனர். இந்நிலையிலும், போட்டிகள் ஒருநாள் கூட நிறுத்தப்படாமல் ஆடப்படுவது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களும், திரளாக மைதானத்திற்கு வந்திருந்ததை பார்க்க முடிந்தது.
Story first published: Saturday, April 25, 2015, 16:23 [IST]
Other articles published on Apr 25, 2015


Click it and Unblock the Notifications