Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்று முதல் ப்ளேஆஃப்…. மும்பையை சுளுக்கெடுத்து பைனல்ஸுக்குப் போகுமா சென்னை?

மும்பை : ஐ.பி.எல் தொடரின் முதலாவது பிளே ஆப் போட்டி அதாவது குவாலிபயர் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு எட்டு மணிக்கு சென்னை - மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துவிடும்.

IPL 2015: First play off round begins today- chennai Face Mumbai


இன்றைய போட்டியில் தோல்வி அடையும் அணி இரண்டாவது தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் மோத வேண்டும். மூன்றாவது தகுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணி இன்றைய போட்டியில் வெல்லும் அணியுடன் இறுதிப் போட்டியில் விளையாடும்.

ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை - மும்பை அணிகள் இதுவரை 22 முறை மோதியுள்ளன. இவற்றில் இரண்டு அணிகளும் தலா 11 வெற்றிகளை பெற்று சமபலத்துடன் உள்ளன.

நடப்பு ஐ.பி.எல் தொடரில் இரண்டு போட்டிகளில் மோதியுள்ள மும்பை மற்றும் சென்னை அணிகள் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளது..

லீக் போட்டிகளில் துவக்கத்தில் இருந்தே சிறப்பாக செயல்பட்ட சென்னை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து எளிதாக தகுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஆனால் மும்பை அணி கடுமையான போராட்டத்திற்கு பின்னரே தகுதிச் சுற்று வாய்ப்பை உறுதி செய்தது.

சென்னை அணியை பொறுத்தவரை கேப்டன் மகேந்திர சிங் தோனி தலைமையில் களம் இறங்குவது மிகப்பெரிய பலமாக கருதப்படுகிறது. ஸ்மித், ரெய்னா, டூயுப்ளெஸ்ஸிஸ், பிராவோ போன்ற வீரர்கள் திறமையாக பேட்டிங் செய்து வருவது சென்னைக்கு கூடுதல் பலமாகும்.

பந்து வீச்சாளர்களை பொறுத்தவரை சென்னை வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

லீக் ஆட்டங்களில் துவக்க வீரராக களம் இறங்கிய பிரன்டன் மெக்கல்லம் அணியில் இருந்து விலகியிருப்பது சென்னைக்கு பலவீனமாக கருதப்படுகிறது. அவருக்கு பதில் ஹஸ்ஸி இன்று களம் இறங்க உள்ளார்.

Story first published: Tuesday, May 19, 2015, 10:08 [IST]
Other articles published on May 19, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+