நல்லா இருந்த ஐபிஎல் கிரிக்கெட்டும், 4 வர்ணனை தேவதைகளும்......!
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் என்றாலே கவர்ச்சிக்கு பஞ்சமிருக்காது... ஒருபுறம் சியர்ஸ் கேர்ள்ஸ்களின் நடனம்... மறுபுறம் கவர்ச்சிகரமான தொகுப்பாளினிகள் என கலர்ஃபுல் கொண்டாட்டம்தான். இம்முறையோ ஒன்றல்ல இரண்டல்ல நான்கு தேவதைகளை வேறு வர்ணனை செய்ய களமிறக்கியுள்ளனர்.
ஏற்கனவே கவர்ச்சிகரமான தொகுப்பாளினிகளால் நிரம்பி வழியும் ஐ.பி.எல்8 போட்டிகளுக்கு பெண் வர்ணனையாளர்களும் இணைந்துள்ளதால் கூடுதல் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் போடிகளில் வர்ணனை செய்ய 26 பேர் கொண்ட வர்ணனையாளர்கள் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நீண்ட நாளைக்குப் பிறகு ரவி சாஸ்திரி வர்ணனையாளராக மீண்டும் களமிறங்குகிறார். இந்திய அணியின் இயக்குநராக இருந்ததால் அவரால் வர்ணனை செய்யமுடியாமல் இருந்தது. இம்முறை அட்டகாசமாக வர்ணனை செய்யப்போகிறார் ரவி சாஸ்திரி.

யார் அந்த நால்வர்
இந்தக் குழுவில் 4 பெண்களும் இடம்பெற்றுள்ளார்கள். அஞ்சும் சோப்ரா, இஷா குஹா, லிசா ஸ்தலேகர், மெலானி ஜோன்ஸ் ஆகிய நான்கு பேரும் வீராங்கனைகள் ஆவர்.

பெண் வீராங்கனைகள்
அஞ்சும் சோப்ரா முன்னாள் இந்திய கேப்டன். ஏற்கெனவே பலமுறை கிரிக்கெட் நிபுணர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளார். இஷா குஹா, இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர். இவரும் கிரிக்கெட் வர்ணனை குழுவில் இடம் பெற்றுள்ளார்.

இந்திய வம்சாவளி
லிசா ஸ்தலேகர், இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர். ஆஸ்திரேலிய முன்னாள் வீராங்கனை. இவர் ஒரு ஆல் ரவுண்டர் ஆவார். மெலானி ஜோன்ஸ், ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீராங்கனை ஆவார்.

ரவி சாஸ்திரி நல்ல மேஸ்திரி
வர்ணனையாளர்களில் ரவி சாஸ்திரி, ஹர்ஷா போக்ளே, ரமீஸ் ராஜா, ரஸல் அர்னால்ட்,சஞ்சய் மஞ்ச்ரேகர், ஸ்காட் ஸ்டைரிஸ்,சைமன் டோல்,சுனில் கவாஸ்கர்,ஆகாஷ் சோப்ரா, ஆலன் வில்கின்ஸ்,
அஞ்சும் சோப்ரா,பிரண்டன் ஜுலியன், டேமியன் பிளெமிங்,டேனியல் மாரிஸன்,டேமின் மார்டின், டேவிட் லாயிட்,எச்டி ஆகர்மேன்,இயன் பிஷப்,இஷா குஹா, கெப்ளர் வெஸல்ஸ்,
லஷ்மண் சிவராமகிருஷ்ணன், லிசா ஸ்தலேகர்,மைக்கேல் ஹெஸ்மேன், முரளி கார்த்திக்,மெலானி ஜோன்ஸ், மெபாங்வா

கவர்ச்சி தொகுப்பாளினிகள்
ஐ.பி.எல் போட்டியின் கலர்ஃபுல் கவர்ச்சி தொகுப்பாளினி மந்திரா பேடி உலகம் முழுவதும் புகழ் பெற்றார். அந்த வரிசையில் ஷிபானி டன்டேக்கர் ரோச்செல் மரியா ராவ், கரிஷ்மா கோடக் மற்றும் அர்ச்சனா விஜயா மயந்தி லங்கர் ஆகியோர் கலக்கலான தொகுப்பும் உண்டு என்பதால் கிரிக்கெட் ரசிகர்களிடையே உற்சாகம் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications