Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இருந்தாலும், பொல்லார்ட் இப்படி பண்ணியிருக்கப்படாது... அதெல்லாம் தப்பேயில்லை: கலந்து கட்டும் ரசிகர்கள

பெங்களூரு: பொலார்ட் வாயில் செல்லோடேப் ஒட்டியிருந்த நிகழ்வு குறித்து, டிவிட்டரில் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகளை கூறியுள்ளனர் ரசிகர்கள்.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது, கெய்லிடம் வம்பு செய்த பொல்லார்டை நடுவர் கண்டித்தார். இதையடுத்து பொல்லார்ட் தனது வாயில் செல்லோ டேப்பை ஒட்டியபடி மைதானத்திற்குள் வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

சிலர் இதை நகைச்சுவையாகவும், சிலர் இதை கிரிக்கெட்டின் விதிமுறைகளுக்கு எதிரான செயலாகவும் பார்க்கின்றனர்.

நல்ல டைம் பாஸ்

ப்ரோக்கன் கிரிக்கெட் என்ற டிவிட்டர் பயனாளர் வெளியிட்ட படத்தில், கடந்த ஆண்டு ஐபிஎல் சீசனின்போது பொல்லாட் பேட்டை எடுத்து ஓங்கியதையும், நடப்பாண்டு செல்லோ டேப் ஒட்டியதையும் வெளியிட்டு, ஆட்டத்தை சுவாரசியமாக்கிவருகிறார் பொல்லாட் என்று கூறியுள்ளார்.

நாங்கள்தான் அடக்க ஒடுக்கமானவங்க

மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்ட டிவிட்டில், வாயில் பிளாஸ்டர் போட்டு பேசாமல் இருக்கிறோமே, எங்கள் அணிக்கு ஃபேர்பிளே விருது வேண்டும் என்று நகைச்சுவையாக கூறியுள்ளது. அடாவடி காட்டாமல் விளையாட்டில் மட்டும் கவனம் வைப்போருக்கு இந்த விருது வழங்கப்படுவதை குறிப்பிட்டு மும்பை இந்தியன்ஸ் இவ்வாறு தெரிவித்துள்ளது.

சித்துவுக்கு ஒட்டுங்கப்பா

சைக்கோ என்ற பயனாளர் கூறுகையில், பொல்லார்ட் டேப்பை ஒட்டியுள்ளார். சித்துவும் ஒட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். சோனி மேக்ஸ் சேனலில் ஹிந்தி காமெண்டரி வழங்கும் சித்து, லபோ, திபோ என சத்தம் போடுவதை கேலி செய்து இந்த ரசிகர் இவ்வாறு கூறியுள்ளார்.

தப்புல்ல..

கிருஷ்ணன் என்ற ரசிகரோ, பொல்லார்டின் செயல் கிரிக்கெட்டின் ஆன்மாவை கெடுக்கும் செயல் என்று கண்டித்துள்ளார். மொத்தத்தில் பொல்லார்ட்தான் நேற்று மேன் ஆப்தி சோஷியல் மீடியாவாக மாறிப்போயிருந்தார்.

Story first published: Monday, April 20, 2015, 16:21 [IST]
Other articles published on Apr 20, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+