Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சீறிய டிவில்லியர்ஸ், சிக்கன சிரிப்பழகன் நெஹ்ரா.. கலக்கிய ஐபிஎல் ஹீரோக்கள்!

கொல்கத்தா: ஐபிஎல் இறுதி போட்டியில் நேற்று இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.

அத்தோடு, 8வது ஐபிஎல் சீசன் முடிவுக்கு வந்தது. இந்த சீசனில் பல்வேறு அணிகள் மற்றும் வீரர்களால் படைக்கப்பட்ட சாதனைகள், கலக்கல் ஆட்டங்கள் பற்றிய ஒரு பார்வை:

4 சதங்கள்

4 சதங்கள்

நடப்பு சீசனில் மொத்தம் 4 சதங்கள் விளாசப்பட்டன. டிவில்லியர்ஸ், பிரெண்டன் மெக்கல்லம், கிறிஸ் கெய்ல் மற்றும் ஷேன் வாட்சன் ஆகியோர் தலா 1 சதங்கள் விளாசியிருந்தனர்.

சீறிய டிவில்லியர்ஸ்

சீறிய டிவில்லியர்ஸ்

டிவில்லியர்ஸ் தனிப்பட்ட முறையில் ஒரே போட்டியில் அதிக ரன் அடித்த வீரராகும். மும்பை அணிக்கு எதிராக 133 ரன்களை அதிரடியாக விளாசி, நாட்அவுட்டாக நின்று பெங்களூர் அணியை வெற்றி பெறச் செய்தார் டிவில்லியர்ஸ்.

அதிரடி சதம்

அதிரடி சதம்

அதிவிரைவாக செஞ்சுரி அடித்தவர் என்ற பெருமை, கிறிஸ் கெயிலுக்கு உரியது. பெங்களூர் வீரரான அவர், பஞ்சாப் அணிக்கு எதிராக 46 பந்துகளில் சதம் விளாசினார். அந்த போட்டியில் பெங்களூர் அணி எளிதில் வென்றது.

அதிரடி அரைசதங்கள்

அதிரடி அரைசதங்கள்

19 பந்துகளில் பஞ்சாப் அணிக்கு எதிராக அரை சதம் அடித்த கொல்கத்தா வீரர் ஆன்ட்ரே ரசல் மற்றும் பஞ்சாப்புக்கு எதிராக 19 பந்துகளில் அரை சதம் அடித்த ஹர்பஜன் ஆகிய இருவருமே அதிவிரைவாக அரை சதம் அடித்த வீரர்களாகும்.

பவுண்டரி நாயகன்

பவுண்டரி நாயகன்

நடப்பு சீசனில் அதிகப்படியான பவுண்டரிகள் விளாசியது ஹைதராபாத் அணியின் டேவிட் வார்னராகும். அவர், 65 பவுண்டரிகள் விளாசியிருந்தார்.

சிக்சர் மழை

சிக்சர் மழை

நட்பு சீசனில் மொத்தம் 692 சிக்சர்கள் விளாசப்பட்டன. 686 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. மும்பைக்கு எதிராக 1 விக்கெட் இழப்புக்கு பெங்களூர் அணி 235 ரன்கள் எடுத்தது ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது.

சிக்கன நெஹ்ரா

சிக்கன நெஹ்ரா

பெங்களூர் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது நடப்பு சீசனின் சிறந்த பவுலிங்காகும். பஞ்சாப் அணியின் மிட்சேல் ஜான்சன், 151.11 கிலோமீட்டர் வேகத்தில் வீசியதுதான் நடப்பு சீசனில் ஒரு பவுலர் வீசிய அதிவேக பந்து வீச்சாகும்.

ஜாகீர், நெஹ்ரா ஜோடி

ஜாகீர், நெஹ்ரா ஜோடி

சென்னைக்கு எதிரான போட்டியில் ஜாகீர்கான் 18 டாட் பந்துகளை வீசினார். 4 ஓவர்கள் வீசிய அவர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி 9 ரன்களை மட்டுமே கொடுத்தார். ஆக, 18 பந்துகளில் ரன்னே கிடைக்கவில்லை. நடப்பு சீசனில் ஒட்டுமொத்தமாக நெஹ்ரா 170 டாட் பந்துகளை வீசி முதலிடம் பிடித்துள்ளார். 22 விக்கெட்டுகளையும் நெஹ்ரா வீழ்த்தியுள்ளார்.

கலக்கிய இளம் வீரர்

கலக்கிய இளம் வீரர்

நடப்பு சீசனில் அதிக மெய்டன் ஓவர்களை வீசியது பஞ்சாப் அணியின் இளம் வீரர் சந்தீப் ஷர்மா. லீக் ஆட்டத்தோடு, பஞ்சாப் நடையை கட்டினாலும்கூட, அவர் 4 மெய்டன்களை வீசியிருந்ததை வேறு பவுலர்களால் முறியடிக்கமுடியவில்லை.

முந்தைய சாம்பியன்கள்

முந்தைய சாம்பியன்கள்

2014- கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 2013- மும்பை இந்தியன்ஸ், 2012- கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 2011- சென்னை சூப்பர் கிங்ஸ், 2010- சென்னை சூப்பர் கிங்ஸ், 2009- டெக்கான் சார்ஜர்ஸ், 2008- ராஜஸ்தான் ராயல்ஸ்.

Story first published: Monday, May 25, 2015, 11:28 [IST]
Other articles published on May 25, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+