Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காலை வாரிய காஸ்ட்லி வீரர்.. யுவராஜ்சிங்கின் சிங்கிள் ரன்னுக்கு டெல்லி கொட்டியது ரூ.6.5 லட்சம்!

சென்னை: ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட யுவராஜ்சிங் சொதப்பலாக ஆடி நடப்பு சீசனை நிறைவு செய்தார்.

கடந்த சீசனில் பெங்களூர் அணிக்காக ரூ.14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார் யுவராஜ்சிங். அப்போது, ஐபிஎல் அணிகளிலேயே அதிக ஏலத்தொகைக்கு பெறப்பட்டவர் யுவராஜ் என்ற சாதனையை அவர் படைத்தார்.

நடப்பு ஐபிஎல் சீசனுக்கான ஏலத்தில், பெங்களூர் அணியில் இருந்து கழற்றிவிடப்பட்ட யுவராஜ்சிங்கை, ரூ.16 கோடிக்கு வாங்கியது டெல்லி. இதன்மூலம், அதிக தொகை வீரர்களில் தனது சாதனையை தானே தகர்த்தார் யுவராஜ்சிங்.

சாதனையில்லை, சோதனை

சாதனையில்லை, சோதனை

ஆனால், விலையில்தான் சாதனைகள் படைக்கப்பட்டதே தவிர, ரன்களில் எந்த சாதனையும் இல்லை. சொல்லப்போனால், முக்கிய மேட்சுகளில் கூட யுவராஜ்சிங்கால், டெல்லி அணிக்கு சோதனைதான் மிஞ்சியதே தவிர, எதிர்பார்த்த ஆட்டம் வெளிப்படவில்லை.

மொத்தம் 248 ரன்கள்

மொத்தம் 248 ரன்கள்

யுவராஜ்சிங் நடப்பு சீசனில் மொத்தம், 13 இன்னிங்சுகளில் பேட் செய்துள்ளார். மொத்தம் சேர்த்த ரன்கள் 248. இதில் இரு அரை சதங்கள் அடங்கும். அதிகபட்ச ரன் என்பது 57. பேட்டிங் ஸ்டிரைக் ரேட் 118. மொத்தம் சேர்த்த பவுண்டரிகள் 23, சிக்சர்கள் 10. ஒரு போட்டியில் டக் அவுட்டும் ஆனார்.

யுவராஜ் எடுத்த ரன்கள்

யுவராஜ் எடுத்த ரன்கள்

சென்னைக்கு-9, ராஜஸ்தான்-27, பஞ்சாப்-54, ஹைதராபாத்-9, கொல்கத்தா-21, மும்பை-2, பெங்களூர்-2, ராஜஸ்தான்-22, மும்பை-57, கொல்கத்தா-0, ஹைதராபாத்-2, சென்னை-32, பெங்களூர்-11.

பந்து வீச்சிலும் சொதப்பல்

பந்து வீச்சிலும் சொதப்பல்

யுவராஜ்சிங் பந்து வீச்சிலும் சொல்லிக்கொள்ளும்படி சாதிக்கவில்லை. 9 ஓவர்கள் வீசிய யுவராஜ்சிங், 72 ரன்களை விட்டுக்கொடுத்ததோடு, ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார். இந்திய அணியில் ஆல்ரவுண்டராக ஜொலித்த யுவராஜ்சிங், டி20 உலக கோப்பை இறுதிபோட்டியின் சொதப்பல் ஆட்டத்துக்கு பிறகு அணியில் சேர்க்கப்படவேயில்லை.

ஒரு ரன் விலை ரூ.6.5 லட்சம்

ஒரு ரன் விலை ரூ.6.5 லட்சம்

யுவராஜ்சிங்கிற்கு டெல்லி கொடுத்த தொகையையையும், நடப்பு சீசனில் யுவராஜ் எடுத்த 248 ரன்களை வகுத்து பார்த்தால், யுவராஜ்சிங்கின் ஒரு சிங்கிள் ரன்னுக்கு டெல்லி கொடுத்த விலை எவ்வளவு தெரியுமா. ரூ.6.5 லட்சம். சரியாக சொன்னால், ரூ.6 லட்சத்து 45 ஆயிரத்து, 161. இந்த தொகையை வளர்ந்து வரும் ஒரு வீரருக்கு கொட்டி கொடுத்திருந்தாலும், வாங்கிய காசுக்கு மேல் விளாசியிருப்பார்.

கடைசி போட்டியிலும்..

கடைசி போட்டியிலும்..

ஐபிஎல் நடப்பு சீசனில் இருந்து லீக் சுற்றிலேயே டெல்லி வெளியேறிவிட்டது. நேற்று பெங்களூருக்கு எதிராக கடைசி லீக் ஆட்டம் நடந்தது. அதிலாவது கற்ற வித்தை மொத்தத்தையும் யுவராஜ் இறக்கி ஆடுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு 11 ரன்களை மட்டுமே பரிசாக அளித்து நடையை கட்டினார் யுவராஜ்சிங்.

ஆட்டத்தை மாற்றினார்

ஆட்டத்தை மாற்றினார்

டெல்லி கேப்டன் டுமினி, ஐபிஎல் சீசன் தொடங்கும் முன்பு அளித்த பேட்டியில், யுவராஜ்சிங் தனியாளாக போட்டியையே மாற்றுவார் என்று கூறியிருந்தார். ஆனால், எந்த அணிக்கு சாதகமாக போட்டியை மாற்றுவார் என்று டுமினி கூறாததன் மர்மம் இப்போதுதான் விடுபட்டுள்ளது.

Story first published: Monday, May 18, 2015, 14:15 [IST]
Other articles published on May 18, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+