Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"சி.எஸ்.கே" இர்பான் பதானுக்கு திடீர் காயம்... இன்றைய முதல் போட்டியில் ஆப்சென்ட் ஆக வாய்ப்பு!

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதல் முறையாக இடம் பெற்றுள்ள இர்பான் பதானுக்கு காயம் ஏற்பட்டிருப்பால் இன்று நடைபெறும் முதல் போட்டியில் அவர் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

இர்பான் பதான் அடிக்கடி காயமடைந்து வந்ததால்தான் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போனது. இப்போது ஐபிஎல்லிலும் அது தொடருவது அவரது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதல் முறையாக இடம் பெற்றுள்ள அவருக்கு முதல் போட்டியிலேயே ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

டெல்லியுடன் முதல் மோதல்

டெல்லியுடன் முதல் மோதல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் இன்று டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் மோதுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்குத் தொடங்கும் போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

உற்சாகத்தில் ரசிகர்கள்

உற்சாகத்தில் ரசிகர்கள்

கடந்த ஆண்டு சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை. அனைத்துப் போட்டிகளையும் ராஞ்சிக்கு மாற்றியிருந்தனர். இந்த நிலையில் இந்த ஆண்டு அங்கு போட்டிகள் நடைபெறுவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

முதல் முறையாக

முதல் முறையாக

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இதுவரை இர்பான் பதான் ஆடியதில்லை. முதல் முறையாக அங்கு வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் முதல் போட்டியில் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சான்ஸ் இல்லை

சான்ஸ் இல்லை

இதுகுறித்து பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறுகையில், இர்பான் பதானுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் டெல்லியுடனனான போட்டியில் ஆட முடியாத நிலை. அவர் ஃபிட்டாக இல்லை. அதேபோல இன்னொரு வேகப் பந்து வீச்சாளரான ஆண்ட்ரூ தையும் காயமடைந்துள்ளார்.

நெஹ்ரா நல்லாருக்காரு

நெஹ்ரா நல்லாருக்காரு

ஆசிஷ் நெஹ்ரா நல்ல நிலையில் உள்ளார். பழைய வீரர்கள் நல்ல பார்மில் இருப்பது சந்தோஷமானது. எல்லோரும் இளைஞர்களையே நாடுகிறார்கள். எனக்கு அனுபவஸ்தர்களைத்தான் பிடிக்கும்.

நெஹ்ரா - ஹஸ்ஸி முக்கியம்

நெஹ்ரா - ஹஸ்ஸி முக்கியம்

நெஹ்ராவும் சரி, மைக் ஹஸ்ஸியும் சரி நல்ல அனுபவசாலிகள். இருவருமே அணிக்கு முக்கியமானவர்கள். அவர்களது பட்டறிவு அணிக்கு உதவியாக இருக்கும். அதேபோல டோணி, ரெய்னா இருக்கிறார்கள்.

அனைவருக்கும் வாய்ப்பு

அனைவருக்கும் வாய்ப்பு

அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் விளையாட வாய்ப்பளிக்கப்படும். அதுதான் அனைவரையும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவியும். அனைத்துத் திறமைகளையும் பரீட்சித்துப் பார்க்கவுள்ளோம் என்றார் பிளமிங்.

Story first published: Thursday, April 9, 2015, 17:40 [IST]
Other articles published on Apr 9, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+