Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மெக்கல்லம் இல்லை.. மும்பையை சொந்த மண்ணில் சந்திக்கனும்.. உஸ்சப்பா: பிளெமிங்

மும்பை: பிரெண்டன் மெக்கல்லம் இல்லாமல், மும்பையை அதன் சொந்த மண்ணில் சந்திப்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சவாலானது என்று அதன் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்தார்.

ஐபிஎல் பிளேஆப் சுற்றில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணியை, அதன் சொந்த மண்ணில், சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. இரவு 8 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.

இந்த போட்டிகுறித்து சென்னை அணியின் தலைமை பயிற்சியாளரும், நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனுமான ஸ்டீபன் பிளெமிங் கூறியதாவது:

பொது இடத்தில் இல்லையே

பொது இடத்தில் இல்லையே

ஐபிஎல் தொடர் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதி, மற்றும் இறுதி போட்டிகள், அதில் ஆடும் இரு அணிகளுக்கும் சம்மந்தமில்லாத பொது இடத்தில் நடத்தப்படுவது அவசியம். ஆனால், இன்றைய பிளேஆப் போட்டி, மும்பையில் நடக்கிறது. மும்பை அணிக்கு அது சாதகமான அம்சம்.

வெளிமண்ணில்

வெளிமண்ணில்

சென்னையை பொறுத்தளவில் இனிமேல் அனைத்து போட்டிகளுமே வெளிமண்ணில்தான் நடைபெற உள்ளது. இது சென்னை அணிக்கு சவாலானது. ஆனால், சென்னை அணியால், எந்த சவாலையும் முறியடிக்க முடியும். இந்த சவாலை சென்னை அணி ஏற்க தன்னை தயார்படுத்திக் கொண்டுள்ளது.

மெக்கல்லம் இல்லை

மெக்கல்லம் இல்லை

பிளேஆப் சுற்று மற்றும் பைனலில் பிரெண்டன் மெக்கல்லம் ஆட முடியாதது சென்னை அணிக்கு பெரும் இழப்பாகும். லீக் சுற்றுகளோடு, மெக்கல்லம், கிளம்பிவிடுவார் என்பது எங்களுக்கு முன்கூட்டியே தெரியும். இருந்தாலும், அவருக்கு மாற்றாக மைக் ஹஸ்சியை ஓப்பனிங்கில் இறக்கி பரிசோதிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

ஹஸ்சியை களமிறக்க காத்திருப்பு

ஹஸ்சியை களமிறக்க காத்திருப்பு

பிளேஆப் சுற்று வாய்ப்பை சென்னை உறுதி செய்துவிட்ட பிறகுதான், சோதனை முயற்சியை எடுக்க முடிந்தது. எனவேதான், கடைசி லீக் போட்டியில், மெக்கல்லத்துடன், மைக் ஹஸ்சியை தொடக்க வீரராக களமிறக்கினோம். அந்த போட்டியில் ஹஸ்சி சரியாக ஆடவில்லை என்றாலும், அவரது கடந்த கால சாதனைகளை வைத்து பார்க்கும்போது, ஹஸ்சி மீது முழு நம்பிக்கையுள்ளது.

வழக்கம்போல ஆடுவோம்

வழக்கம்போல ஆடுவோம்

பிளேஆப் சுற்று மற்றும் பைனலில், ஹஸ்சியும், ட்வைன் ஸ்மித்தும், தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள்.,, ஹஸ்சி தனது முழுதிறமையையும் வெளிப்படுத்தி, மெக்கல்லம் இடத்தை நிரப்புவார் என்று நம்புகிறேன். சென்னை தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, புத்திசாலித்தனமாக இந்த ஆட்டத்தை வெல்ல முயற்சி செய்யும். இவ்வாறு பிளெமிங் தெரிவித்தார்.

Story first published: Tuesday, May 19, 2015, 11:15 [IST]
Other articles published on May 19, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+