Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உத்தப்பா- சர்ப்ராஸ்கான் மோதலை ஊதி பெரிதாக்காக்காதீங்கப்பா.... காம்பீர்

கொல்கத்தா: நடப்பு ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர் சர்ப்ராஸ் கானின் சட்டை காலரை பிடித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸின் உத்தப்பா பிடித்து உலுக்கிய விவகாரத்தை ஊதிப் பெரிதாக்க வேண்டாம் என்று கொல்கத்தா கேப்டன் கவுதம் காம்பீர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் கடந்த 11-ந்தேதி இரவு கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்றது.

உத்தப்பா- சர்ப்ராஸ்கான் மோதல்

உத்தப்பா- சர்ப்ராஸ்கான் மோதல்

இந்த ஆட்டம் முடிந்த போது பெங்களூரு இளம் வீரர் சர்ப்ராஸ் கானுக்கும், கொல்கத்தா வீரர் ராபின் உத்தப்பாவுக்கும் இடையே தகராறு நடந்திருக்கும் விவகாரம் வெளியே வந்தது.

சட்டையை பிடித்து உலுக்கி..

சட்டையை பிடித்து உலுக்கி..

சர்ப்ராஸ் கானின் சட்டை காலரை பிடித்து உத்தப்பா உலுக்கியதாகவும், அதைத் தொடர்ந்து பெங்களூரு வீரர்கள் டிவில்லியர்ஸ், அசோக் திண்டா ஓடிவந்து உத்தப்பாவை சமாதானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் போட்டி நடுவர் ஸ்ரீநாத் முன்னிலையில் உத்தப்பா மன்னிப்பு கேட்டுக் கொண்டதால் சர்ச்சை முடித்து வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் தனக்கு அது போன்று எந்த புகாரும் வரவில்லை என்று ஸ்ரீநாத் மறுத்துள்ளார்.

உத்தப்பா செய்தது சரி..

உத்தப்பா செய்தது சரி..

இதனிடையே இந்த பிரச்சினை குறித்து கொல்கத்தா கேப்டன் கவுதம் காம்பீர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உத்தப்பாவின் நடவடிக்கையில் எந்த தவறும் இல்லை. வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாட வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புகிறார்கள். நானும் மைதானத்தில் ஆக்ரோஷமாகத்தான் இருப்பேன்.

சரி விட்டுவிடுங்க..

சரி விட்டுவிடுங்க..

மைதானத்திற்குள் இறங்கி வெற்றி பெற வேண்டும் என்றால் ஆக்ரோஷமாக இருந்து தான் ஆக வேண்டும். அதுவும் ஐ.பி.எல். போட்டிகளில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது இயல்பு தான்.

இதை ஊடகங்கள் ஊதி பெரிதுபடுத்த வேண்டாம், விட்டு விடுங்கள்.

இவ்வாறு காம்பீர் கூறினார்.

Story first published: Wednesday, April 15, 2015, 13:36 [IST]
Other articles published on Apr 15, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+