Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஷிரேயாஸ் ஐயர் 'அபார திறமை' படைத்தவர்... இந்தியாவுக்காக 2 ஆண்டுகளில் விளையாடுவார்: டுமினி புகழாரம்!!

ராய்ப்பூர்: நடப்பு ஐ.பி.எல். 8வது போட்டிகளில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஷிரேயாஸ் ஐயர் அபார திறமை படைத்தவர்.. அவர் இன்னும் 2 ஆண்டுகளில் இந்திய அணியில் இடம்பிடித்து திறமையை வெளிப்படுத்துவார் என்று அந்த அணியின் கேப்டன் ஜேபி டுமினி புகழாரம் சூட்டியுள்ளார்.

IPL 2015: 'Massive talent' Shreyas Iyer will play for India in 2 years: JP Duminy

ராய்ப்பூரில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. டெல்லி அணியின் ஷிரேயாஸ் ஐயரின் அரை சதம் மற்றும் ஜாகீர்கானின் பந்துவீச்சு டெல்லியின் வெற்றிக்கு வித்திட்டிருந்தது.

IPL 2015: 'Massive talent' Shreyas Iyer will play for India in 2 years: JP Duminy

20வயதான மும்பையைச் சேர்ந்தவர் ஷிரேயாஸ் ஐயர். அவரை டெல்லி டேர்டெவில்ஸ் அணி ரூ2.6 கோடி க்டுத்து விலைக்கு வாங்கியது. சென்னைக்கு எதிரான போட்டியில் 49 பந்துகளில் 70 ரன்களை குவித்து அபாரமாக விளையாடினார். இதில் 10 பவுண்டரிகள் ஒரு சிக்சர் அடங்கும்.

ஷிரேயாஸ் ஐயரின் இந்த அசுர வேக ஆட்டத்தை டெல்லி அணி கேப்டன் டுமினி புகழ்ந்து தள்ளியுள்ளார். மேலும் இந்தியாவுக்கு கிடைத்த அபாரமான வீரர் ஷிரேயாஸ் ஐயர்.. இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் இந்திய அணிக்காக நிச்சயம் ஷிரேயாஸ் ஐயர் விளையாடுவார் என்றார் டுமினி.

Story first published: Wednesday, May 13, 2015, 12:57 [IST]
Other articles published on May 13, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+