Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சூப்பர் ஓவர் திரில் வெற்றி! ராஜஸ்தானின் வெற்றி பாதைக்கு முட்டுக்கட்டை போட்டது பஞ்சாப்!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான்-பஞ்சாப் ஆட்டம் டிரா ஆன நிலையில், சூப்பர் ஓவரில், ராஜஸ்தானை வீழ்த்தி, அதன் தொடர்ச்சியான வெற்றிகளுக்கு தடை போட்டது பஞ்சாப்.

பஞ்சாப்-ராஜஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் அமதாபாதில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதைத் தொடர்ந்து அஜிங்கியா ரஹானேவும், கேப்டன் ஷேன் வாட்சனும் ராஜஸ்தானின் பேட்டிங்கை தொடங்கினர். இந்த இணையைப் பிரிக்க முடியாமல் பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் திணறினர்.

11.3-ஆவது ஓவரில் வாட்சன் பந்தை இறங்கி அடிக்க முயன்று ஸ்டம்ப்பிங் ஆனார். இதனால் அவர் 45 ரன்களுடன் (35 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்ஸர்) வெளியேறினார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 95 ரன்கள் சேர்த்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய தீபக் ஹூடா 19 ரன்களிலும், ஸ்டீவ் ஸ்மித் டக் அவுட்டிலும் வெளியேறினர்.

ரஹானே அபாரம்

ரஹானே அபாரம்

மறுமுனையில் ரஹானே எவ்வித தடுமாற்றமும் இன்றி ஆடிவந்தார். அவர் நடப்புத் தொடரில் தனது மூன்றாவது அரை சதத்தை எளிதாகக் கடந்தார். தொடர்ந்து ஆடிய ரஹானே இந்த முறை தனது சதத்தை நிறைவு செய்துவிடுவார் என்று எதிர்பார்த்த வேளையில் ஜான்சன் வீசிய 18ஆவது ஓவரில் ரித்திமான் சாஹாவிடம் கேட்ச் ஆனார். 54 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 74 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இதன் பின்னர் பஞ்சாப் அணிக்கு ஃபாக்னர் (1 ரன்), கருண் நாயர் (25 ரன்கள்) ஆகியோரின் விக்கெட்டுகள் மட்டுமே கிடைத்தன.

ராஜஸ்தான் ரன் குவிப்பு

ராஜஸ்தான் ரன் குவிப்பு

கடைசி கட்டத்தில் ஸ்டூவர்ட் பின்னி 4 பந்துகளில் 12 ரன்களும், சஞ்சு சாம்சன் 5 ரன்களும் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் 6 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து இமாலய இலக்கை விரட்டி பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக முரளி விஜய்யும், கேப்டன் சேவாக்கும் களமிறங்கினர். இரண்டாவது ஓவரின் கடைசி பந்தில் சேவாக் (1), ஸ்டீவ் ஸ்மித் கையால் ரன் அவுட்டானார்.

பஞ்சாப் தொடக்கத்தில் தடுமாற்றம்

பஞ்சாப் தொடக்கத்தில் தடுமாற்றம்

தொடர்ந்து விஜய் 21 ரன்னிலும், மேக்ஸ்வெல் ஒரு ரன்னிலும் வெளியேற 4ஆவது விக்கெட்டுக்கு பெய்லிக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட ஷான் மார்ஷ்-டேவிட் மில்லர் பார்ட்டனர் ஷிப் அமைத்தனர். அணியின் ஸ்கோர் 59 ஆக இருந்த போது கைகோர்த்த இந்த இணை தங்கள் பங்குக்கு 58 ரன்கள் சேர்த்து பிரிந்தது. 14.3வது ஓவரில் பிரவீண் தாம்பே வீசிய பந்தில் மார்ஷ் 65 ரன்கள் (40 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்ஸர்) எடுத்த நிலையில் ரஹானேவிடம் கேட்ச் ஆனார்.

மில்லர் அபாரம்

மில்லர் அபாரம்

தொடர்ந்து ரித்திமான் சாஹா களமிறங்க மில்லர் தனது அதிரடியைத் தொடங்கினார். கடைசி 30 பந்துகளில் அணியின் வெற்றிக்கு 70 ரன்கள் தேவைப்பட்டது. ஃபாக்னர் வீசிய 16வது ஓவரில் மட்டும் இரண்டு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 18 ரன்கள் கிடைத்தது. தொடர்ந்து அதிரடியாக ஆடிய இந்த ஜோடி வெற்றியை எளிதாக்கி பிரிந்தது.

சாஹா 19 ரன்களுடனும் (8 பந்து), மில்லர் 54 ரன்களுடனும் (30 பந்து, ஒரு பவுண்டரி, 5 சிக்ஸர்) தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர்.

டிரா

டிரா

முந்தைய ஜோடியின் போராட்டம் வீணாகி போய்விடாத வகையில் தொடர்ந்து வந்த ஜான்சன்-அக்ஷர் படேல் ஜோடி துணிந்து செயல்பட்டது. கடைசி இரண்டு ஓவர்களில் 25 ரன்கள் தேவைப்பட்டது. மோரீஸின் 19ஆவது ஓவரில் 11 ரன்கள் கிடைத்தது. இதனால் ஃபாக்னர் வீசிய கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு 14 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. 5 பந்துகளில் 9 ரன்களை ஓடியே சேர்த்தது ஜான்சன்-படேல் ஜோடி. இறுதி பந்தில் வெற்றிக்கு 5 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் படேல் விளாசிய பந்து பவுண்டரியானது. இதனால் பஞ்சாப் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து ஆட்டம் "டிரா' ஆனது.

சூப்பர் ஓவர்

சூப்பர் ஓவர்

எனவே, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல்முறையாக, வெற்றியை கணிக்கும் "சூப்பர் ஓவர்' முறை பின்பற்றப்பட்டது. இதில் முதலில் பஞ்சாப் பேட்டிங் செய்தது. மில்லரும், மார்ஷும் களமிறங்கினர். மோரீஸ் ஓவரின் முதல் பந்தில் மில்லர் எல்பிடபிள்யூ ஆனார். பின்னர் மேக்ஸ்வெல், மார்ஸ் இணைந்து 15 ரன்கள் சேர்த்தனர். தொடர்ந்து 16 ரன்களை இலக்காகக் கொண்டு ராஜஸ்தான் கேப்டன் வாட்சனும், ஃபாக்னரும் களமிறங்கினர்.

இரு விக்கெட்டுகளும் போனதால் ஆட்டம் குளோஸ்

இரு விக்கெட்டுகளும் போனதால் ஆட்டம் குளோஸ்

ஜான்சன் வீசிய முதல் பந்தில் வாட்சன் போல்டானார். தொடர்ந்து ஸ்மித் களமிறங்கினார். 2ஆவது பந்தில் நோ-பாலுடன் 4 ரன்களும் அடுத்த இரண்டு பந்துகளில் தலா ஒரு ரன்கள் என 6 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்த பந்தில் ஃபாக்னர் ரன் அவுட்டானதால் சூப்பர் ஓவர் முடிவுக்கு வந்தது. இதனால் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக மார்ஷ் தேர்வானார். பஞ்சாபுக்கு இது 3ஆவது வெற்றியும், ராஜஸ்தானுக்கு முதல் தோல்வியுமாகும்.

Story first published: Wednesday, April 22, 2015, 11:15 [IST]
Other articles published on Apr 22, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+